அதே இடம்.. அதே புயல்.. OMG.. 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் Depression!

Nov 26, 2024,11:29 AM IST

சென்னை : தற்போது உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கைக்கு அருகே உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்தத்தை கண்டு வானியல் ஆய்வாளர்களே ஆச்சரியப்பட்டு போய் உள்ளனர். காரணம் இருக்குங்க மக்களே.. அதுவும் சுவாரஸ்யமான காரணம்.


தற்போது இலங்கைக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தான் கனமழை பெய்து வந்தது. 




கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழை இல்லாமல் இருந்த நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே சென்னையில் குளிரான வானிலை நிலவிய நிலையில், தற்போது மீண்டும் துவங்கி உள்ள மழையால் வெப்பநிலை என்பது வெகுவாக குறைந்து பகலிலேயே கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. 

இன்று பிற்பகல் முதல் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களுக்கும் அதி கன மழை எச்சரிக்கை ஏற்கனவே விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த காற்றழுத்தம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது இலங்கை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வரலாற்று அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள அதே இடத்தில் 99 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1912 மற்றும் 1925 ஆகிய ஆண்டுகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. 99 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே இடத்தில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. 


1925ம் ஆண்டு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு வந்த போது புயலாக உருமாறியதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த முறையும் அப்படி நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். காற்றின் நகர்வை பொறுத்தே புயலாக மாறுமா, இல்லையா என்பது சொல்ல முடியும் என சொல்லப்படுகிறது.


அது புயலாக மாறுகிறதோ இல்லையோ.. இப்பவே சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதே ரேஞ்சுக்கு இன்னும் சில மணி நேரம் பெய்தால் ஊர் தாங்காது. எனவே அது புயலாக மாறாமல் பார்த்துப் பதமாக கடந்து போய் விட்டால் நல்லது.. சென்னைக்கு!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்னையை வச்சு செய்த கன மழை.. விட்டு விட்டு பெய் ராசா.. தாங்காது!

news

Healthy Soups.. ஜிலுஜிலு மழைக்கேற்ற.. சூப்பரான கமகம வெஜிட்டபிள் சூப்.. செமையா இருக்கும்!

news

Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்

news

Gold rate .. தங்கம் விலை.. இன்றும் சூப்பராக குறைந்தது.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

அதே இடம்.. அதே புயல்.. OMG.. 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் Depression!

news

Natural medicine for Ulcer.. வயிற்று வலி, அசிடிட்டி தாங்க முடியலையா.. இயற்கையான மருந்து இருக்கே!

news

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் எப்படி இருக்கார்.. உடல்நிலைக்கு என்ன? அப்பல்லோ விளக்கம்

news

Chennai Rains.. சென்னையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

news

தமிழ்நாட்டை மெல்ல மெல்ல நெருங்கி வரும் காற்றழுத்தம்.. இன்றும் நாளையும் அதி கன மழைக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்