சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் எதிரி யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதிலால் பரபரப்பு கூடியது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுப் பணிகளில் காலையில் ஈடுபட்டார். அதன் பின்னர் சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.
செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் ஒருவர், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவின் எதிரி யார் என்று கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காத உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்குங்க என்று சட்டென்று கூறி விட்டு கிளம்பினார்.
வரும் சட்டசபைத் தேர்தல் களத்தில் திமுகவுக்கு தவெக கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தவெக தலைமையில் கூட்டணி அமையவிருப்பதாகவும், அதில் யாரெல்லாம் இடம் பெறக் கூடும் என்ற பரபரப்பான பேச்சும் அடிபடுகிறது. மேலும் விஜய்யும் கூட, திமுகவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்து சூட்டைக் கிளப்பி விட்டுள்ளார். இதுதொடர்பான விவாதங்கள் இன்னும் கூட முடியவில்லை.
விஜய்யின் வருகை, அவரது கட்சிக்கு கூடி வரும் இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு ஆகியவற்றை திமுகவும் கவனிக்காமல் இல்லை. அதற்கேற்ப அது தனது பணிகளையும் முடுக்கி விட்டு வருகிறது. விஜய்யின் வருகையை ஊகித்துதான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினும் விடாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். கிடைக்கும் கேப்பில் எல்லாம் எதிராளிகளுக்கு அதிரடியாக பதில் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் திமுகவின் எதிரி யார் என்ற கேளவிக்கு இப்படி ஒரு பதிலை அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கலைஞர் மருத்துவமனை டாக்டர் பாலாஜியை குத்தியால் குத்திய.. விக்னேஷ்வரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!
யாருக்கும் பாதுகாப்பில்லை...அரசு டாக்டர் தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் கூடுகிறது.. முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க!
EXCLUSIVE: அண்ணாமலை மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யார்?.. பாஜக கையில் 3 ஆப்ஷன்கள்!
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து.. எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை கண்டனம்
டாக்டர் மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது.. இனி இப்படி நடக்காது.. உதயநிதி ஸ்டாலின்
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோர்.. டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.. உதயநிதி ஸ்டாலின்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை.. நாங்க ரொம்ப கிளியரா இருக்கோம்.. எடப்பாடிபழனிசாமி
Cooking Tips: சுறுசுறு மீன் குழம்புக்கே டஃப் கொடுக்கும்.. Tasty மண்சட்டி பாகற்காய் குழம்பு!
{{comments.comment}}