சென்னை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இரு மொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
குறிப்பாக முதல்வர் மு க ஸ்டாலின் மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டுவதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதே போல் அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் நாளை மாலை 4 மணிக்கு திமுக சார்பில் அனைத்து கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அநியாயம். இதெல்லாம் அராஜகம். ஒன்றிய அரசு மாநில அரசின் மீது நிகழ்த்துகின்ற பெரும் கொடுமை. நாம் கட்டியிருக்க கூடிய வரிப்பணத்தில் தான் கேட்கிறோம். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். நமது மாநிலத்திற்கு ஒதுக்கவேண்டிய நிதியை சேர்த்தும் மற்ற மாநிலத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். எப்போதுமே தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெளிவாக கூறி விட்டார்கள். நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் துறை அதிகாரிகளும் என்னிடம் விளக்கியுள்ளனர் . முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. குறிப்பாக ஃபெஞ்சல் புயலுக்கு 6500 கோடி நிதி கேட்கப்பட்ட நிலையில் வெறும் 600 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருந்தது. தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாடை புறக்கணித்து வருகிறது. இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். அதே சமயத்தில் எந்த சூழ்நிலையிலும் கல்வி உரிமையை நமது தமிழ்நாடு அரசும் முதல்வரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் கூறியுள்ளார்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. கொசுவைப் பிடிச்சு.. இந்தப் பொண்ணோட ஹாபி என்ன தெரியுமா?
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
{{comments.comment}}