சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் எந்த பகுதிகளிலும் பெரியதாக மழைநீர் தேங்க வில்லை. சோசியல் மீடியாக்களின் மூலம் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சென்னையில் எந்தப் பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை. ஒரு சுரங்கப்பாதை தவிர மற்ற 21 சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. சோசியல் மீடியாக்களில் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதனை சரி செய்யப்படுகிறது. மழை நீரை அகற்ற சக்தி வாய்ந்த மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் 129 நிவாரண மையங்களும், 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள்,மேயர், அதிகாரிகள், ஆணையர், உள்ளிட்ட பலரும் களத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.. மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
இதற்கிடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில், பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி
ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று காலை ஆய்வு செய்தோம்.
மாநகராட்சியில் மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தாழ்வான பகுதிகள் - சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவற்றின் தற்போதைய நிலை குறித்து அங்கிருந்த நேரடி கண்காணிப்பு மையத்தில் பார்த்து, அது தொடர்பான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.
மேலும், மழை பற்றிய விவரங்கள் - கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்துக்கு வரும் அழைப்புகளின் விவரங்களைப் பெற்றதோடு, நாமும் பொதுமக்களின் தேவைகளை உதவி மையத்தின் வாயிலாக கேட்டறிந்தோம். ஒருங்கிணைந்து விழிப்புணர்வுடன் செயல்படுவோம். இந்த மழை காலத்தில் இடர் தவிர்ப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கலைஞர் மருத்துவமனை டாக்டர் பாலாஜியை குத்தியால் குத்திய.. விக்னேஷ்வரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!
யாருக்கும் பாதுகாப்பில்லை...அரசு டாக்டர் தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் கூடுகிறது.. முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க!
EXCLUSIVE: அண்ணாமலை மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யார்?.. பாஜக கையில் 3 ஆப்ஷன்கள்!
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து.. எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை கண்டனம்
டாக்டர் மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது.. இனி இப்படி நடக்காது.. உதயநிதி ஸ்டாலின்
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோர்.. டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.. உதயநிதி ஸ்டாலின்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை.. நாங்க ரொம்ப கிளியரா இருக்கோம்.. எடப்பாடிபழனிசாமி
Cooking Tips: சுறுசுறு மீன் குழம்புக்கே டஃப் கொடுக்கும்.. Tasty மண்சட்டி பாகற்காய் குழம்பு!
{{comments.comment}}