அண்ணாமலையை முடிஞ்சா அண்ணாசாலை பக்கம் வரச்சொல்லுங்க.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

Feb 20, 2025,05:55 PM IST

சென்னை: அண்ணாமலையை முடிஞ்சா அண்ணா சாலை பக்கம் வரச்சொல்லுங்க. இன்றைக்கு நிகழ்ச்சி இருக்கு. அங்க தான் இருப்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் தெரிவித்துள்ளார்.


இது குறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தமிழ்நாடு கேட்கும் நிதியை வாங்கித் தர துப்பில்லை. பிரச்சினையை திசை திருப்புவதாக சவால் விடுகிறார். 2018ல் பிரதமர் மோடி வந்தபோதே எதிர்ப்புகளை கண்டு சுவரை இடித்துக் கொண்டு மாற்று வழியில் சென்றதை எல்லாரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.


என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் கூறியிருந்தார். ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் எதையோ செய்வதாக தெரிவித்து இருந்தார். தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்கள். இன்றைக்கு நிகழ்ச்சி இருக்கு அங்க தான் இருப்பேன்.  தமிழகத்தில் நிதி உரிமையை திசை திருப்புவதற்காகவே இப்படி செய்கிறார்கள். 




தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்று தான் நடத்துகிறார்கள். தனியார் பள்ளியில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையோ தருகிறார்களா என்ன.. தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். 


கும்பமேளாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது. எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயம் அடைந்தார்கள் என்பது குறித்து அறிக்கை எதும் வெளியிடப்படவில்லை. இதற்கு முழு முதல் காரணம் பாஜக அரசு தான். கும்பமேளாவிற்கு போயிட்டு திரும்பும் போது, காசியில் தமிழக வீரர்கள் சிக்கிவரும் சம்பவம் குறித்து இன்று காலை எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள்  தமிழகம் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் வருவதற்கு விமான டிக்கெட்டும் போட்டு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன என்று பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

news

உலக தாய் மொழி தினம்.. தமிழுக்கு எதிராக நிகழ்ந்து விட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின?

news

PMSHRI திட்டத்தில் இணைந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை

news

ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு

news

ஒரு நாட்டைக் கைப்பற்ற.. அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர்

news

Welcome To Tamil Nadu: நேற்று அந்த ஹேஷ்டேக்.. இன்று இந்த ஹேஷ்டேக்.. நடுவுல புகுந்த தவெக.. அடடே!

news

கூல் தோனி.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து போட்ட சூப்பர் போஸ்ட்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!

news

உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!

news

மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்