தஞ்சாவூர்: திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. தமிழ்நாடு மக்கள் அதற்கான பதிலடி கொடுப்பார்கள். நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தஞ்சை மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலா் கல்லணை செல்லக்கண்ணு இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அதற்கான பதிலடி கொடுப்பார்கள். திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கின்றார்கள். இந்த உற்சாகம் தான் எதிரணியினருக்கு மிகுந்த எரிச்சலை தருகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாம் தருகின்ற தொடர் வெற்றி தான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை தருகிறது. பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் எப்படியாவது திமுகவில் ஒரு விரிசல் விழுந்து விடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். ஆக நாம் நம்முடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. தலைவர் 200 தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். 2026ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைத்து, தலைவர் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார். திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். அதற்கான உறுதியை இந்த தஞ்சை மண்ணில் அனைவரும் ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}