சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடகிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் மேகக் கூட்டமே இல்லாமல் கடந்து சென்றதால் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. அது கடந்து போனதே தெரியாத அளவுக்கு படு வீக்காக மாறி தாழ்வுப் பகுதியாக அது கடந்து சென்றது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புதுச்சேரி மற்றும் ஆந்திராவுக்கு இடையே சென்னைக்கு அருகே இன்று காலை கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. சென்னைக்கு அருகே மையம் கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று முன்தினம் மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தெற்கு ஆந்திரா நோக்கி நகரத் தொடங்கியதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை அளவு குறைந்தது.
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அது தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டில் மீது நிலவுகிறது. இதனால் பகல் நேரத்தில் நல்ல வெயில் இருக்கும். மாலை இரவு நேரங்களில் வெப்ப சலனத்தால் ஒரு சில இடங்களில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. பெரிதான மழை வாய்ப்பு இருக்காது. மிதமான வெப்பச்சலன மலைக்கே வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த ஈர நிலை மாறி இன்று காலை முதல் சுள்ளென வெயில் அடித்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு வளாகத்தை கழுவி சுத்தப்படுத்துவது, துணிகளை மொட்டை மாடிகளில் காயப் போடுவது என மக்கள் பிசியாகி விட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}