வெளுக்கும் வெயில்.. கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு

Apr 22, 2024,06:42 PM IST

சென்னை: கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும்  மெட்ரிக் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டு தேர்வுகள் முடிவுற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்வு எழுதும் 10,11,12 ஆகிய வகுப்புக்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் சமீப காலங்களாக நடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளால் பள்ளியின் தேர்ச்சி விகிதம்  உயருகிறது. இதனால்  தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவதில் அதிகளவில் ஆர்வம் காண்பித்து  வருகின்றன. 




முன்னர் எல்லாம் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைபெற்று வந்த, இந்த சிறப்பு வகுப்புகள் தற்பொழுது அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களிடையே உளவியல் பிரச்சனை ஏற்படுவதாக புகார்களும் வரத்தொடங்கி காரணத்தால், இந்த சிறப்பு வகுப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த விடுமுறை காலங்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை அளித்துள்ளது.


இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அதனை மீறி கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்