டென்மார்க் ராணி ரிடையர் ஆகிறார்.. அனவுன்ஸ் பண்ணிட்டாங்க.. அரியணைக்கு புது ராஜா வர்றார்!

Jan 01, 2024,06:47 PM IST

கோபன்ஹேகன்: டென்மார்க் ராணியாக இருக்கும் 2ம் மார்கரெட், ஜனவரி 14ம் தேதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.


அவரது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான இளவரசர் பிரடெரிக் மன்னராக முடி சூட்டப்படவுள்ளார். கடந்த 52 வருடமாக ராணியாக இருந்து வருகிறார் 2ம் மார்கரெட். இவர்தான் ஐரோப்பாவிலேயே நீண்ட காலம் ராணியாக இருந்த சாதனைக்குரியவர்.


தற்போது ராணி மார்கரெட்டுக்கு 83 வயதாகிறது. 1972ம் ஆண்டு அவர் ராணியாக முடி சூட்டப்பட்டார். இந்த நிலையில் திடீரென தனது ஓய்வை அவர் அறிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி வருடா வருடம் மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுவார் ராணி மார்கெரட். அந்த வகையில் இந்த ஆண்டு உரையின்போதுதான் தனது ஓய்வு குறித்து அவர் முறைப்படி அறிவித்தார்.




ராணியின் இந்த அறிவிப்பு டென்மார்க் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  இருப்பினும் ராணியின் உடல் நலக்குறைவுதான் அவரை ஓய்வு முடிவுக்கு இட்டுச் சென்றதாக கருதப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு முதுகில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் நாட்டின் வருங்காலம் குறித்து அதிகம் கவலைப்பட ஆரம்பித்தார் ராணி. தனது வாரிசை முன்கூட்டியே அறிவித்து விட வேண்டும் என்றும் அவர் முடிவெடுத்தார். அதன்படியே தற்போது தனது முடிவை அவர் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து ராணி மார்கரெட் கூறுகையில், சரியான நேரத்தில்தான் நான் முடிவெடுத்துள்ளேன். எனது தந்தைக்குப் பின்னர் இந்தப் பொறுப்புக்கு வந்து 52 ஆண்டுகளாகிறது. டென்மார்க் ராணி பதவியிலிருந்து ஜனவரி 14ம் தேதியன்று நான் விலகுகிறேன். எனது மகன் இளவரசர் பிரடெரிக்கிடம் மணி மகுடத்தை ஒப்படைக்கவுள்ளேன் என்று கூறினார்.


ஐரோப்பாவிலேயே நீண்ட காலம் ராணியாக இருந்த பெருமை இங்கிலாந்து ராணியிடம்தான் இருந்து வந்தது. கடந்த 2022ம் ஆண்டு அவர் மறைந்த பின்னர் ராணி மார்கரெட்தான், நீண்ட காலம் ராணியாக இருந்து வருகிறார்.  மேலும் டென்மார்க் வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்த பெருமையும் அவருக்கே உண்டு.


இங்கிலாந்தைப் போலவே, டென்மார்க்கிலும் அரசின் அதிகாரப்பூர்வ அதிகாரங்கள் எல்லாமே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம்தான் உள்ளன. அரச பதவி என்பது கெளரவப் பதவியாகவே உள்ளது. இருப்பினும் மக்களின் அன்பைப் பெற்றவர்களாக ராஜ குடும்பத்தினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் அனைத்துப் பணிகளும் ராஜ குடும்பத்திற்கு அங்கு முதல் மரியாதை கொடுக்கப்படும்.


நீண்ட காலம் ராணியாக இருந்து நாட்டை வழி நடத்தியமைக்காக ராணி மார்கரெட்டுக்கு பிரதமர் மெட்டே பிரடிரக்சன் நன்றி கூறியுள்ளார்.


மன்னர் 9வது பிரடெரிக் மற்றும் ராணி இங்கிரிட் ஆகியோருக்கு மகளாக 1940ம் ஆண்டு பிறந்தவர் ராணி மார்கரெட். டென்மார்க் மக்களின் அன்பை தனது சிறு வயது முதலே பெற்ற பெருமைக்குரியவர்.  மிகமிக கிரியேட்டிவான சிந்தனை கொண்டவர் ராணி மார்கரெட். அவரது திறமைகளுக்கு டென்மார்க் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உண்டு.  ஆர்க்கியாலஜி துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல தொல்லியல் ஆய்வுகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவர்.


1953ம் ஆண்டு தனது 31வது வயதில் அரச வாரிசாக அறிவிக்கப்பட்டார். இவரது கணவர் பெயர் ஹென்றி டி லாப்ரடே டி மான்பிஸாட். இவர் பிரெஞ்சுக்காரர். 2018ம் ஆண்டு அவர் காலமானார்.

சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்