சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவைச் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல், அதன் சேல்ஸ் பிரிவில் இருந்து 12,000த்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனமான டெல் மீண்டும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருவது, அந்நாட்டு பங்குசந்தையை பதம் பார்த்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் இன்டெல் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கிய நிலையில், இந்த வாரம் டெல் நிறுவனம் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிநீக்கம் மூலம் டெல் அதிகப்படியான பணத்தைச் சேமிக்க வழிவகுத்தாலும், இந்த சேமிப்பை வைத்துப் பிற முக்கியமான திட்டத்தை டெல் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ ப்ராடெக்ட் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த பணிக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக ப்ளூம்பெர்க் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. உலகமே ஏஐ தொழில் நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேலையில் டெல் நிறுவனமும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாற உள்ளது. தற்பொழுது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி எத்தனை பேரை பணி நீக்கம் செய்ய உள்ளது என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் டெல் நிறுவனத்தின் இந்த பணி நீக்க சுற்றில் சுமார் 12,000த்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏஐ திறன்களில் முதலீடுகளை அதிகரிக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கையாக இந்த பணிநீக்கம் விளங்குகிறது.டெல் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தில் முக்கியமான விஷயம் ஏஐ சேவைக்கும், ப்ராடெக்களை உருவாக்குவதற்கும் புதிய பிரிவை உருவாக்கப்படுவது தான். டெல் நிறுவனம் ஏஐ சேவைகளுக்கு ஏற்ற சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர் பிரிவில் உயர்தர சேவையை வங்கும் நிறுவனமாக மேம்படுத்துவதே புதிய ஏஐ பிரிவு அமைப்பதற்கான நோக்கமாக உள்ளது. 2023ம் ஆண்டு 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து இந்த புதிய பணிநீக்க அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}