இந்த நிமிஷத்துல .. உலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரம்.. டெல்லிதான்!

Nov 05, 2023,12:19 PM IST

டெல்லி: உலகிலேயே மிகவும் மோசமான டாப் 10 நகரங்களின்  பட்டியலில் இந்த நிமிடத்தில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. இதுதவிர மும்பை, கொல்கத்தா ஆகிய பிற இந்திய நகரங்களும் கூட டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


டெல்லியையும், காற்று மாசையும் பிரிக்கவே முடியாது. இந்த காற்று மாசுக்கு நிரந்தரத் தீர்வு காண என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். ஆனால் இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை. சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க டெல்லி அரசும், மத்திய அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. இதுவரை எந்த பலனும் கிடைத்தபாடில்லை.




குளிர்காலங்களில் டெல்லியில்  மாசு மிக மிக மோசமாக இருக்கும். தற்போதும் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஐக்யூஏர் நிறுவனத்தின் காற்று மாசுக் குறியீட்டில் டெல்லிதான் உலகிலேயே மிகவும் மோசமான நகராக இன்று விளங்குகிறது. 


இந்த நிறுவனத்தின் ரியல் டைம் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி 620 என்ற காற்று மாசுக் குறியீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் லாகூர் இருக்கிறது. ஆனால் அதன் மாசுக் குறியீடு 393தான். 4வது இடத்தில் கொல்கத்தா உள்ளது. அதன் மாசு குறியீடு 183 ஆகும். 6வது இடத்தில் மும்பை உள்ளது. டாப் 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 நகரங்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 நகரங்களும் உள்ளன. 10 நகரங்களில் 7 நகரங்கள் ஆசிய நாடுகள் என்பது இன்னொரு சோகமாகும்.


சமீபத்திய செய்திகள்

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்