டெல்லி பள்ளிகளில் மொபைல் போனுக்கு தடை.. டீச்சர்களுக்கும்தான்!

Aug 11, 2023,11:11 AM IST
டெல்லி : டெல்லியில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்கள் கொண்ட வருவதற்கு மாநிலக் கல்வித்துறை இயக்குனரகம் தடை விதித்துள்ளது. அதோடு தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்துச் செல்ல வில்லை என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிப்பதற்கான நல்ல சூழல்நிலையை ஏற்படுத்துவதற்காக மொபைல் போன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்தள்ளது. இந்த மொபைல் போன் தடை மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தான். பாடம் நடத்தம் வேளைகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மொபைல் போன் மாறி விட்டது. நம்முடைய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன. அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் மனஅழுத்தம், சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது, தூக்கமின்மை, பார்வை குறைபாடு, உயர் அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மொபைல் போன்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களில் மதிப்பெண்கள் குறைகிறது. அவர்களின் படிப்பு திறன் மட்டுமின்றி நேருக்கு நேர் பார்த்து பேசும் தன்மை, மற்றவர்களுடனுனான பழக்கம் உள்ளிட்டவைகளும் குறைகிறது. தேவையற்ற புகைப்படங்கள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்வது, அப்லோட் செய்வது, தேவையற்ற தகவல்களை பரப்புவது உள்ளிட்டவற்றால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

இதனால் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பள்ளிக்கு மொபைல் போன்களை எடுத்து வந்தால் அவற்றை பாதுகாக்கும் லாக்கரில் ஒப்படைத்து விட வேண்டும். பள்ளி முடிந்து செல்லும் போது அவைகள் மீண்டும் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும். வகுப்பறைகளுக்குள் கண்டிப்பாக மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது. ஆசிரியர்களும் பள்ளி நேரத்தில் வகுப்பறை, மைதானம், ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகளை தொடர்பு கொள்வதற்கு பள்ளிகளில் உதவி எண் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்