டெல்லி சட்ட மசோதா.. ஜெகன் மோகனை தொடர்ந்து நவீன் பட்நாயக்கும் ஆதரவு

Aug 02, 2023,09:50 AM IST

டெல்லி : டெல்லி அவசரச்சட்ட மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு மேலும் ஒரு ஆதரவு கிடைத்துள்ளது.


ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவைத் தொடர்ந்து , தற்போது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும் பாஜக.,விற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.




டெல்லி மாநிலத்தின் ஆட்சி அதிகாரம், அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுப்ரீம் கோர்ட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அந்த சட்டத்தில் சிறிது மாற்றம் கொண்டு வந்து, அந்த திருத்தப்பட்ட அவசர சட்ட மசோதாவை சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.


இந்த அவரச சட்டத்தை நிறைவேற்ற விடக் கூடாது என ஆம்ஆத்மி கட்சி கடுமையாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை அரவிந்த் கெஜ்ரிவால் நாடி உள்ளார். பாஜக.,விற்கு எதிராக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியான இ-ந்-தி-யா., சார்பில் பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 


இது ஒரு புறம் இருந்தாலும் பாஜக.,விற்கு லோக்சபாவில் பலம் அதிகம் என்பதால் அங்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெற்று விடும். ஆனால் 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பாஜவிற்கு 103 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ராஜ்யசபாவில் 7 இடங்கள் காலியாக வேறு உள்ளன. இதற்கிடையே ராஜ்யசபாவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்  என்றால் 120 உறுப்பினர்களின் ஓட்டு பாஜக.,விற்கு தேவை. ஏற்கனவே ராஜ்யசபாவில் 9 உறுப்பினர்களையும், லோக்சபாவில் 22 உறுப்பினர்களையும் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இதனால் பாஜக.,வின் பலம் 112 ஆக உயர்ந்திருந்தது.


இந்நிலையில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும் டில்லி அவசர சட்ட விவகாரத்தில் பாஜக.,விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர 5 நியமன எம்பி.,க்கள், ஒரு சுயயேட்சை எம்பி.,யும் பாஜக.,விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளதால், பெரும்பான்மையை விட அதிக பலத்தை பாஜக பெற்று விட்டது. இது தவிர சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியோரும் டில்லி அவரச சட்ட விவகாரத்தில் பாஜக.,விற்கு ஆதரவு தர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்