டெல்லி: டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் மாற்றியுள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பான தகவலை அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஏ. சூர்ய பிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்பட்டவருமான ஜவஹர்லால் நேரு நினைவாக டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகம் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்த அருங்காட்சியகத்தின் பெயரை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்திருப்பதாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் சூர்யபிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி அது பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
{{comments.comment}}