டெல்லி டூ மும்பை.. இந்தியாவிலேயே நீளமான எக்ஸ்பிரஸ் சாலை.. என்னென்ன ஸ்பெஷல் பாருங்க!

Feb 13, 2023,01:16 PM IST
டெல்லி: டெல்லி - மும்பை இடையே புதிதாக அமைக்கப்படும் 1386 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த சாலைதான் நாட்டிலேயே மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.



ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கத்காரி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த சாலையின் விசேஷங்களைப் பட்டியலிட்டால் அதுவும் இந்த ரோடு போலவே நீண்டு கொண்டே போகிறது. வாங்க அதையும் பார்க்கலாம்.

- டெல்லி மும்பை இடையிலான இந்த சாலையானது மொத்தம் 1386 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

- பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தது முதல்கட்டமான டெல்லி  - ஜெய்ப்பூர் இடையிலான 246 கிலோமீட்டர் சாலையை.



- டெல்லி தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் வழியாக மகாராஷ்டிராவை இந்த சாலை அடையும். மொத்தம் 6 மாநிலங்களில் இந்த  சாலை அமைகிறது.

- இந்த சாலை செல்லும் முக்கிய நகரங்களாக  டெல்லி, இந்தூர், போபால், வதோதரா, ஜெய்ப்பூர், சூரத், மும்பை ஆகியவை அடங்கும்.

- சாலை அமைக்கும் பணிக்காக 15,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 

- இந்த சாலை முழுமையாக தயாரான பின்னர் டெல்லி - மும்பை இடையிலான பயண நேரம் 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக குறையும்.



- டெல்லி - மும்பை இடையிலான  தொலைவு தற்போது உள்ள 1424 கிலோமீட்டர் என்பதிலிருந்து 1242 கிலோமீட்டராக குறையும்.

- இந்த சாலையால் 93 பொருளாதார மண்டலங்கள், 13 துறைமுகங்கள், எட்டு பெரிய விமான நிலையங்கள் உள்ளிட்டவை பயன் பெறும்.

- முழுமையான பசுமை வழிச்சாலையாக இது உருவாக்கப்படுகிறது. மொத்த நெடுஞ்சாலையிலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மழை நீர் சேகரிப்புக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

IMD Alert: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை.. வலுவிழக்கும்.. புயலாக மாற வாய்ப்பில்லை!

news

6 மாவட்டங்களில் அதி கன மழை.. 4 மாவட்டங்களில் மிக கன மழை.. நாளை.. வானிலை மையம் தகவல்

news

மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐசியு.,வில் அனுமதி.. தீவிர சிகிச்சை

news

Cyclone Memes: "நான்லாம் வந்தேன்னு வை.. புதுச்சேரியை இப்படி ஒரு புரட்டு..சென்னையை அப்படி ஒரு புரட்டு

news

ஆழ்ந்த காற்றழுத்தம் எப்போது புயலாக மாறும்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தரும் விளக்கம் இதுதான்!

news

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை:.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு

news

Drumsticks: கிடுகிடு வென உயர்ந்து வரும் முருங்கை விலை.. கிலோ ரூ.100.. எப்படி சாம்பார் வைக்கிறது!

news

புயல் சின்னம் எதிரொலி.. சென்னையில் 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை கன மழை பெய்யும்.. பிரதீப் ஜான்

news

பிரியங்கா காந்தி எனும் நான்.. அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றார் பிரியங்கா காந்தி

அதிகம் பார்க்கும் செய்திகள்