டெல்லி: மதத்தை தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்ததால், தேர்தலில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் ஜோன்டேல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி மத ரீதியாக பேசி வாக்காளர்களைத் திசை திருப்புவதாகவும், அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், உத்திரப்பிரதேசத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மதம் தொடர்பாக பேசியும், அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியதாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து குரு பிரதிநிதிகளை அழைத்து வந்ததாகவும் கூறி பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசின் செலவில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துச் சென்று வாக்காளர்களிடையே மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் பிரதமருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் கீழ் அவரை தேர்தலில் இருந்து 6 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யவும் வழக்கறிஞர் ஜோன்டேல் கூறியுள்ளா். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்திருந்ததால், விசாரணை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}