எங்களைப் பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க.. பகிரங்கமாக விரக்தியை வெளிப்படுத்திய நீதிபதி!

Nov 28, 2023,06:59 PM IST

டெல்லி: நீதிபதிகள் என்றால் மாலை 4. 30 மணியோடு வேலை முடிந்து விடும். ஜாலியாக கோல்ப் ஆட போய் விடுவார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். அது மிக மிக தவறு. நாங்கள் ஒரு நாளைக்கு 14 முதல் 15 மணி நேரம் வேலை பார்க்கிறோம்.. வீட்டையும், வேலையையும் பாலன்ஸ் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் கூறியுள்ளார்.


அலுவலக வேலையையும், வீட்டுக் கடமைகளையும் பாலன்ஸ் செய்வது போன்ற ஒரு பெரும் சிரமம் வேறு எதற்குமே கிடையாது.. குறிப்பாக பெண்கள்.. அலுவலகம் போகும் பெண்களின் பாட்டை சொல்லி மாள முடியாது. வீட்டையும் கவனிக்க வேண்டும். அலுவலகத்திலும் நல்ல பெயர் வாங்க வேண்டும். காலை முதல் இரவு தூங்கப் போகும் வரை அவர்கள் ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.. ஆனால் பெயர் என்னவோ "குடும்பத் தலைவர்" எனப்படும் கணவர்களுக்கு மட்டுமே தானாக வந்து ஒட்டிக் கொள்ளும்.


இந்த நிலையில் பெண் நீதிபதி ஒருவர் பொது நிகழ்ச்சியில் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் இடையே பேலன்ஸ் செய்வதில் தாங்கள் கடும் சிரமத்தை சந்திப்பதாக கூறியுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் பிரதீபா சிங். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.




இதுகுறித்து அவர் கூறியதாவது:


ஊடகங்களில் நான் அடிக்கடி ஒன்றைப் படிக்க நேரிடும். அதாவது நீதிபதிகளுக்கான கோடை  விடுமுறை, குளிர்கால விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று அடிக்கடி செய்திகள் வரும்.  அதாவது நீதிபதிகள் என்றால் காலை 10.30 மணிக்கு கோர்ட்டுக்குப் போவார்கள்.. 4.30 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார்கள். அதன் பிறகு கோல்ப் ஆடப் போய்விடுவார்கள் என்ற கருத்து பலருக்கும் உள்ளது. அது தவறானது.


நாங்கள் காலையில் கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு  2 மணி நேரத்திற்கு முன்பே வேலையை ஆரம்பித்து விடுகிறோம். அதேபோல 4.30 மணி வரை கோர்ட்டில்தான் இருக்கிறோம். அதன் பிறகு ஒரு மணி நேரம் நிர்வாக ரீதியிலான வேலைகளைப் பார்க்கிறோம். அதன் பிறகு உத்தரவுகள், தீர்ப்புகளை இறுதி செய்கிறோம்.. அடுத்த நாள் என்ன விசாரணை வருகிறது என்பதைப் பார்வையிடுகிறோம். ஒரு நாளைக்கு 14 முதல் 15 மணி நேரம் வரை வேலை பார்க்கிறோம். குடும்பத்தையும், நீதிமன்றப் பணிகளையும் பேலன்ஸ் செய்ய தடுமாறுகிறோம். ரொம்பக் கஷ்டம்.


நீதிபதிகள் நிறையத் தியாகம் செய்கிறார்கள் என்றால், அவர்களது குடும்பங்கள் அதை விட அதிகமான தியாகத்தை செய்கின்றன. இதுதான் உண்மை என்றார் நீதிபதி பிரதீபா சிங்.


உண்மைதான்.. நீதிபதிகள் என்றில்லை..  இந்தக் கால கட்டத்தில், எந்த வேலையாக இருந்தாலும், வீட்டை மறந்து விட்டுத்தான் பலரும் பணியாற்றுகிறார்கள். உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை, குடும்பத்துக்காக டைம் ஒதுக்க நேரம் இருப்பதில்லை. வேலை வேலை என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டுத்தான் ஓட வேண்டியுள்ளது.. ஆனால் அதை பாலன்ஸ் செய்வதும் அவசியம்.. ஒரு கட்டத்தில் உழைத்து உழைத்து ஓய்ந்து உட்காரும்போதுதான் குடும்பத்தின் அருமையும், நமது உடல் நலத்தின் அருமையும் நமக்குத் தெரிய வரும். அதற்குள் சுதாரித்துக் கொள்வதும் அவசியம்.

சமீபத்திய செய்திகள்

news

Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!

news

அமைச்சர் கே. என். நேருவுக்கு உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் சிகிச்சை.. காய்ச்சல் என்று தகவல்

news

கல்யாண வீடியோக்களில் நெட்பிளிக்ஸ் ஆர்வம்.. நாக சைதன்யா கல்யாண வீடியோ உரிமை.. ரூ.50 கோடியாம்!

news

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்னையை வச்சு செய்த கன மழை.. விட்டு விட்டு பெய் ராசா.. தாங்காது!

news

Healthy Soups.. ஜிலுஜிலு மழைக்கேற்ற.. சூப்பரான கமகம வெஜிட்டபிள் சூப்.. செமையா இருக்கும்!

news

Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்

news

Gold rate .. தங்கம் விலை.. இன்றும் சூப்பராக குறைந்தது.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

அதே இடம்.. அதே புயல்.. OMG.. 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் Depression!

news

Natural medicine for Ulcer.. வயிற்று வலி, அசிடிட்டி தாங்க முடியலையா.. இயற்கையான மருந்து இருக்கே!

அதிகம் பார்க்கும் செய்திகள்