கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.. வழக்கைத் தள்ளுபடி செய்ய டெல்லி ஹைகோர்ட் மறுப்பு!

Apr 09, 2024,04:41 PM IST

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது அமலாக்கத்துறை ஆவணங்கள் மூலம் தெளிவாகிறது. எனவே அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்று டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது.


புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி வந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கைவிட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து,  உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுஜித் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முன்நிலையில் விசாரணைக்கு வந்தது. 




அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்று தடை உள்ளதா? என்று மனுதாரரிடம் பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும். பதவியில் இருந்து நீக்குவது குறித்து துணைநிலை ஆளுநரோ அல்லது குடியரசு தலைவரோ தான் முடிவு செய்ய வேண்டும். டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


இந்நிலையில், தன்னுடைய கைதை எதிர்த்தும், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது, இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய  பங்காற்றி உள்ளார் என நீதிபதி கூறி கெஜ்ரிவாலின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்