டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மது விலக்குக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, அவர் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக உச்சநீதிமன்றம் ஜூன் 2ம் தேதி வரை ஜாமீன் அளித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இதையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் தரப்பில் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஜாமீன் கோரி வழக்குத் தொடரப்பட்டது. முன்னதாக கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனால் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் இன்று நீதிபதி நியாய் பிந்து இந்த ஜாமீன் மனுவை விசாரித்து, கெஜ்ரிவாலுக்கு ரூ. 1லட்சம் ரொக்க ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட கோர்ட்டில் கெஜ்ரிவால் நாளையே ஜாமீன் மனுவை சமர்ப்பித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும், தாங்கள் அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வரவுள்ளார்.
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}