புதுடில்லி: டெல்லி சலோ போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் நாளில் நடத்தப்பட்ட பேரணிகளில் மோதல்கள் காயங்கள் ஏற்பட்ட போதும் பேரணி தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்தது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. 4 கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தியும், பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட வில்லை. இதனால் விவசாயிகளில் போராட்டம் மேலும் வலுப்பெற்றது.
போராடும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க டெல்லி போலீசார் குவிக்கப்பட்டனர். பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப்-ஹரியானா இடையே ஷாம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் பஞ்சாப்-ஹரியானா இடையிலான கானாரி எல்லையில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் 22 வயதான விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார். போலீஸ் நடத்திய ரப்பர் குண்டு துப்பாக்கிச் சூடு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக விவசாய தலைவர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சம்பவத்தை ஹரியானா காவல்துறை மறுத்து இருந்தது.
சுப்கரனின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் இளம் விவசாயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்திருப்பதுடன், பிரேத பரிசோதனை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டில் ஒரு பகுதியாக அவரது குடும்பத்திற்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாய சங்க தலைவர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதன் காரணமாக அவரது பிரேத பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் இறுதியாக பேசிய வார்த்தைகள் குறித்து உருக்கமான தகவல்களும் வெளியாகி பரபரப்பாகி உள்ளது. அதன்படி இறப்பதற்கு முன்னர் சுப்கரன் சிங் தனக்கும் சக விவசாயிகளுக்கும் காலை உணவு தயாரித்துள்ளார். அப்போது உணவை பகிர்ந்து கொள்ளவும் அல்லது ஒன்றாக உட்காரவோ இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என அருகில் இருந்தவர்களிடம் கூறி இருக்கிறார். சுப்கரன் சிங்குக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி சலோ போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி சுப்கரன்சிங் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும், அவரது சகோதரிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்