மீண்டும் மீண்டுமா.. ஸ்லோ பவுலிங் போட்டதற்காக.. ரிஷப் பந்த்துக்கு ரூ.24 லட்சம் அபராதம்!

Apr 04, 2024,03:06 PM IST

விசாகப்பட்டினம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலதாமதமாக பந்து வீசியதாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 தொடரின் 17ஆவது சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. இதில் டெல்லி அணி 17.2 ஓவர்களில் 106 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இப்போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.




இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய டெல்லி அணி மிகவும் மெதுவாக பந்து வீசியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் டெல்லி அணிக்கு 2வது முறையாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி  20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப்  பந்த் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி, ஊதியத்தில் 12 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று ஐபிஎஸ் நிர்வாகம் தெரிவித்தது.


இதே போன்று இந்த முறையும் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது 2வது முறை என்பதால் ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அல்லது ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்