டெல்லி : டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் தற்போது ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் 7வது சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரான டெல்லியில் 70 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 83.5 லட்சமாகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 70.7 லட்சமாகும். 3ம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை 1261 ஆகும்.
இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும். காங்கிரஸ் மூன்றாவது பெரும் சக்தியாக களம் காண உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியிலும், தற்போதைய முதல்வர் அதிஷி கல்கஜ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பாஜகவும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. பாஜக சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஷாகிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் ஷாகிப் சிங் வர்மாவை நியூ டெல்லி தொகுதியில் களமிறக்கி உள்ளது.
48 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ள காங்கிரஸ் முக்கியமான ஐந்து அறிவிப்புகளுடன் கூடிய தேர்தல் வாக்குறுதிகளை நேற்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து நியூ டெல்லி தெகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகன் சந்தீப் தீட்ஷித்தை களமிறக்கி உள்ளது.
இந்த தேர்தலில் பெண்கள், முதியவர்களுக்கான விஷயங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என சொல்லப்படுகிறது. மிக கடுமையான மும்முனை போட்டி நிலவும் என்பதால் தலைநகரை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதி.. திமுகவுக்கா அல்லது காங்கிரசுக்கா? .. காத்திருக்கும் வி.சி. சந்திரகுமார்
ஆளும் கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? .. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
தண்டனை (சிறுகதை)
Gold rate.. கடந்த 3 நாட்களாக அமைதிகாத்த தங்கம் விலை... இன்று திடீர் உயர்வு...!
திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி
ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?
அண்ணாநகர் பாலியல் வழக்கு.. அதிமுக செயலாளர் அதிரடி கைது.. கட்டப் பஞ்சாயத்து செய்த கொடுமை!
{{comments.comment}}