டெல்லி: ஆப்கானிஸ்தான் அரசு டெல்லியில் உள்ள தனது தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
நவம்பர் 23ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படுகிறது. இந்திய அரசிடமிருந்து பல்வேறு சவால்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதியுடன் எங்களது அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே முடித்து கள்ளப்பட்டு விட்டன.
விரைவில் சாதகமான சூழ்நிலை உருவாகும், ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக இந்திய அரசு தனது நடைமுறைகளை கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். அப்படி ஒரு நிலை வரும்போது மீண்டும் தூதரகம் தொடங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காண நாங்கள் தீவிரமாக முயன்றோம். இருப்பினும் அது எந்த வகையிலும் பலன் தராததால் கொள்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கும் இந்தியா இந்தியா கொடுத்து வந்த ஆதரவுக்கு மிகுந்த நன்றிகள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி இல்லாத காரணத்தால், இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிக்கான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு ஏற்கனவே நிறுத்திவிட்டது. மனிதாபிமான உதவிகள் மட்டுமே தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்திய தரப்பிலிருந்து எந்த வித விதமான உதவியும் கிடைக்காத காரணத்தாலும், தூதரகத்தில் பணியாற்றி வந்த பல தூதர்கள், அதிகாரிகள், இந்தியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் பஞ்சம் புகுந்து விட்டதாலும் போதிய நிதி பற்றாக்குறை காரணமாகவும் தூதரகத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலைமைக்கு தலிபான அரசு தள்ளப்பட்டது.
இப்படி பல்வேறு காரணங்கள் எதிரொலியாகவே, தூதரகத்தை மூடும் முடிவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு வந்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி தூதரகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் மிச்சமுள்ள ஊழியர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டதைத் தொடர்ந்து தற்போது நிரந்தரமாக தூதரகத்தை ஆப்கானிஸ்தான அரசு மூடிவிட்டது.
தளிவான் அரசு அமைந்த பின்னர் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து பெரிய அளவில் யாரும் வருவதில்லை. குறிப்பாக படிப்பதற்காக மாணவர்கள் வருவதில்லை. அகதிகளும் வருவதில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் தூதரகத்துக்கான சேவைகளும் மிகவும் குறைந்துவிட்டன. இதுவும் கூட ஒரு காரணமாக கருதப்படுகிறது.
{{comments.comment}}