ஐசிசி டிசம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனை.. ஆல் ரவுண்டர் தீப்தி சர்மாவுக்குப் புதுப் பெருமை!

Jan 17, 2024,04:21 PM IST

டெல்லி: இந்திய  மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்  தீப்தி சர்மா, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மாதந்தோறும் ஒரு சிறந்த வீராங்கனையை தேர்வு செய்வது ஐசிசியின் வழக்கம். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீராங்கனையாக தீப்தி சர்மாவைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி.




இந்தப் போட்டியில் தீப்தி சர்மாவுடன் மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் 41 வயதான ஜிம்பாப்வேயின் நட்சத்திர வீராங்கனை ப்ரீசியஸ் மாரங்கே ஆகியோரும் களத்தில் இருந்தனர். இவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தீப்தி சர்மா இந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார்.


டிசம்பர் மாதம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடியபோது அசத்தலாக விளையாடியிருந்தார் தீப்தி சர்மா.  குறிப்பாக ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒரு நாள் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் தீப்தி சர்மா. அதுதான் அவரை ஐசிசி சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்ய உதவியது.


டிசம்பர் மாதம் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் தீப்தி சர்மா 165 ரன்களைக் குவித்தார். அவரது சராசரி 55 ஆகும். ந்து வீச்சிலும் அவர் 11 விக்கெட்களை வீழ்த்தி கலக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்