சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 3 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்றுத் தீர்ந்துள்ளன.
அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில்,சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். வழக்கமான ரயில்களின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.இந்நிலையில், எப்படியும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வரும், அந்த ரயில்களிலாவது டிக்கெட்டு எடுத்து விட வேண்டும் என்று ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அந்த மக்களுக்கான அறிப்பு வெளியாகியது.
அதன்படி, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 29ம் தேதியும், நவம்பர் 5ம் தேதியும் ஒரு சிறப்பு ரயில் (ரயில் எண் 06001) இயக்கப்படவுள்ளது. இது சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அக்டோபர் 30ம் தேதியும், நவம்பர் 6ம் தேதியும் சிறப்பு ரயில்கள் (ரயில் எண் 06002) இயக்கப்படும். இதேபோல சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் ஒரு ரயிலும், மறு மார்க்கத்தில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7ம் தேதி இன்னொரு ரயிலும் இயக்கப்படுகிறது.
தாம்பரம் - கன்னியாகுமரி இடையே இன்னொரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் 12ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறு மார்க்கத்தில் அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் 12ம் தேதிகளில் கன்னியாகுமரியிலிசிலருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிக்கெட் வாங்க மக்கள் வெகு ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் முன்பதிவு தொடங்கிய சிலநிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டும் விற்று விட்டது. இப்போது வெயிட்டிங் லிஸ்ட்டுக்குப் போய் விட்டது. சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் அல்லது வெயிட்டிங் லிஸ்ட், ஆர்ஏசியில் உள்ளவர்களுக்கு தனி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மக்களே இப்போதும் உங்களுக்கு நல்ல வாய்ப்புண்டு. அரசு ஏகப்பட்ட சிறப்புப் பேருந்துகளை தீபாவளிக்காக இயக்கவுள்ளது. எனவே அதில் பயணம் செய்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}