இட்லி-கறிக்குழம்பு .. தலை தீபாவளி கொண்டாடும் புது மாப்பிள்ளைக்கான ஸ்பெஷல் காம்போ!

Oct 30, 2024,10:40 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: தல தீபாவளி கொண்டாடும் ஜோடீஸ்களே.. முதல்ல எங்களோட வாழ்த்துகளை வாங்கிக்கோங்க.. சந்தோஷமா இருங்க.. ஜாலியா இருங்க.. எப்பவும் சிரிச்சுக்கிட்டே கலகலன்னு இருங்க.. ஓகேவா.. சரி இப்ப உங்களுக்காக நாங்க புது மாப்பிள்ளை ஸ்பெஷல் இட்லி கறிக்குழம்போட  பார்க்க வந்திருக்கோம்.. வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம்.


இட்லிக்கு எப்பவுமே சூப்பர் ஜோடி இந்த கறிக் குழம்புதாங்க.. அதுவும் தீபாவளிக்கு இந்த ஜோடி இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது.. அதிலயும் புதுசா கல்யாணம் செஞ்சிருக்கிற தங்களோட மகளோட தலை தீபாவளிக்கு பெற்றோர்கள் அப்படி கவனிப்பாங்க. மாப்பிள்ளைகளை உட்கார வச்சு வகை வகையா செஞ்சு தந்து அவங்களை சந்தோஷப்படுத்துறதுல நம்ம ஊர் அம்மா அப்பாக்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.


ஸோ, இன்னிக்கு தலை தீபாவளிக்காக, புது மாப்பிள்ளைகளுக்கான ஸ்பெஷல் ஆட்டுக்கறி + இட்லி காம்போ பார்க்கப் போறோம்.. வாங்க கிச்சனுக்குள் ஓடிடலாம்.


இட்லி ( எப்படி பண்றதுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.. ஒரு வேளை தெரியாதவங்களுக்காக இந்த டிப்ஸ்):




தேவையான பொருட்கள் :


இட்லி அரிசி - 4 கப்

முழு உளுத்தம் பருப்பு - 1 கப்பு (வெள்ளை உளுந்தம் பருப்பு)

வெந்தயம் - 1 ஸ்பூன்

ஐஸ்கட்டி அல்லது ஐஸ் தண்ணீர் - 1/2 கப்


செய்முறை :


* அரிசியை 3 மணி நேரமும், உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை 1 1/2 மணி நேரமும் ஊற வைக்க வேண்டும்.


* கிரைண்டரில் உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்து அரைக்க வேண்டும். அதில் ஐஸ்கட்டி அல்லது ஐஸ் தண்ணீர் ஊற்றினால் உளுந்து நன்றாக உபரி ஆகும். உளுந்துடன் வெண்டைக்காய் விதைகள் சிலவற்றை சேர்த்து அரைத்தாலும் இட்லி மிருதுவாக வரும்.


* பிறகு உளுந்தை எடுத்து விட்டு, அதே கிரைண்டரில் அரிசியை சேர்த்து அரைக்க வேண்டும்.


* இரண்டு மாவையும் சேர்த்து பிசைந்து உப்பு தேவைக்கேற்ப சேர்தஅது பிசைந்து, 5 மணி நேரம் மூடி புளிக்க வைக்க வேண்டும்.


* பிறகு இட்லி தட்டில் இட்லி வார்த்தால் மல்லிகைப்பூ போல இட்லி ரெடி.


கறிக்குழம்பு :


தேவையான பொருட்கள் :


மட்டன் அல்லது சிக்கன் - 1/2 கிலோ

சீரகம், மிளகு - 2 ஸ்பூன்

பட்டை, கிராம்பு - 10

கசகசா - 1/2 ஸ்பூன்

தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்

தக்காளி - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

வரமிளகாய் - 4

மல்லித்தூள் - 3 ஸ்பூன்

பூண்டு - 20 பல்

இஞ்சி - 2 ஸ்பூன் நறுக்கியது

சோம்பு - 1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10


செய்முறை :


* மட்டன் அல்லது சிக்கனை மஞ்சள் தூள், கல் உப்பு போட்டு கழுவ வேண்டும்.


* மசாலா அரைப்பதற்கு இஞ்சி, பூண்டு, தனித்தனியாக நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


* அதே மிக்ஸி ஜாரில் கசகசா, சீரகம், மிளகு, தக்காளி, கறிவேப்பிலை, மல்லித்தழை (பாதி அளவு) தேங்காய் துருவல், வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மைய அரைக்க வேண்டும்.


* குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும் (கடுகு தேவைப்பட்டால் சேர்க்கலாம்)


* கறியை இதோடு சேர்த்து, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு நன்கு கிளறவும். பிறகு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து,  கறி சிறிதளவு வேக விட வேண்டும்.


* மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குழம்பு பதம் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கறி வேகும் வரை விசில் விட வேண்டும்.


* குக்கரில் பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து கொஞ்சம் எண்ணெய் பிரிந்து வரும் வரை அடுப்பினை சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும்.


* இறுதியாக மல்லித்தழை தூவி இறக்கி, பரிமாறலாம். எங்க வீட்டு தீபாவளி ஸ்பெஷல் இட்லி, கறிக்குழம்பு ரெடி.


ஆஹா.. வாசம் இங்கே வரைக்கும் அடிக்குதே.. சூட்டோட சூடா சாப்பிட்டு சந்தோஷமா  தீபாவளியை புதுப் பொண்டாட்டியோட ஜாலியா கொண்டாடுங்க மாப்ளைஸ்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வீரராக பிறந்து வீரராக மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

news

கங்குவா பட எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்.. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

news

இட்லி-கறிக்குழம்பு .. தலை தீபாவளி கொண்டாடும் புது மாப்பிள்ளைக்கான ஸ்பெஷல் காம்போ!

news

தீபாவளி 2024 : பாரம்பரிய முறையில் எண்ணெய் வைத்து குளிக்க இதுதான் நல்ல நேரம்!

news

Monsoon: சூடு பிடிக்கும் மழைக்காலம்.. நோய்களைத் தவிர்ப்பது எப்படி.. மாணவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

news

அக்டோபர் 30 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

கடக ராசிக்காரர்களே.. வெற்றி வாசல் தேடி வரும்.. தனுசு ராசியா.. உஷாரய்யா உஷாரு!

news

நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்