சென்னை: தீபாவளிக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட வழக்கமான மற்றும் சிறப்புப் பேருந்துகள் மூலம் 5.25 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து தற்போது இயங்கி வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டபோது சின்னச் சின்ன குறைகள் இருந்தன. ஆனால் உடனுக்குடன் அவை நிவர்த்தி செய்யப்பட்டதால் தற்போது அந்தப் பேருந்து நிலையம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு பல லட்சம் பயணிகளை சிறப்பாக கையாண்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல சவுகரியமான ஏற்பாடுகளை கிளாம்பாக்கம் பஸ் நிலைம் செய்திருந்தது.
இந்த வருட தீபாவளிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமான 3408 பேருந்துகளுடன் கூடுதலாக 4876 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும் பஸ்களை நிறுத்தி வைப்பதர்காக வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கரசங்கால் விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அக்டோபர் 28ம் தேதி முதல் இங்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 28ம் தேதி மொத்தம் 1692 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் மூலம் 1.10 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டனர். 29ம் தேதி 3221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2.40 லட்சம் பயணிகள் இதில் பயணம் செய்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர். 30ம் தேதி 3471 பஸ்கள் இயக்கப்பட்டன. 1.75 லட்சம் பயணிகள் பிரயாணம் செய்தனர்.
மொத்தமாக இந்த 3 நாட்களில் 8284 பேருந்துகள் மூலமாக 5.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}