ஹய்யா ஜாலி.. சென்னை மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைக்க முடிவு!

Oct 03, 2023,02:01 PM IST

சென்னை: சென்னையில் உள்ள புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைத்து சோதனை அடிப்படையில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.


சென்னை மாநகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று புறநகர் மின்சார ரயில்கள். இதை வைத்து பல புத்தகங்கள் போடலாம்.. அத்தனை அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் அமைதியான தோழன்தான் சென்னை மின்சார ரயில்கள்.


இந்த ரயில்களில் பெரிய அளவில் அடிப்படை வசதிகள் கிடையாது. ஏறலாம், உட்காரலாம், இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிப் போய்க்கலாம். அவ்வளவுதான். கழிப்பறை வசதியோ, ஏசி வசதியோ எதுவும் கிடையாது. இப்போது பஸ்களில் கூட ஏசி பஸ்கள் வந்து விட்டன. ஆனால் இந்த ரயில்கள் மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளன.


இந்த நிலையில், புறநகர் மின்சார ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ரயில்வே நிர்வாகம் ஏற்றுள்ள நிலையில் சோதனை முறையில் ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 அல்லது 3 பெட்டிகளை இணைத்து முதலில் சோதனை முறையில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  6 மாதங்களில் சோதனை ஒட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த இரண்டு நாட்களாக தாம்பரம் டூ சென்னை கடற்கரை வரையிலான புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்தப் பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் பாராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி இருந்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைக்க முடிவு செய்திருப்பது சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இனி கொழுத்தும் சென்னை வெயில் காலத்தை குளுகுளுன்னு கழிக்கும் வாய்ப்பை இந்த ரயில்கள் தரும் என்று நம்பலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்