சென்னை: 51 வயதேயான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் 73 வயதான நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வட மாநில சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். முதலில் இமயமலைக்குப் போனார். பின்னர் அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் சென்றார். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திற்குப் போயுள்ளார்.
லக்னோவில் அவர் அம்மாநில துணை முதல்வருடன் இணைந்து ஜெயிலர் படம் பார்த்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது யோகியைப் பார்த்ததும் நேராக போய் அவரது காலைத் தொட்டு வணங்கினார் ரஜினிகாந்த். அவரை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார் யோகி ஆதித்யநாத்.
யோகி ஆதித்யநாத்துக்கு 51 வயதுதான் ஆகிறது. ரஜினிகாந்ததுக்கோ 73 வயதாகிறது. கிட்டத்தட்ட ரஜினிக்கு மகன் வயதில் இருக்கிறார் யோகி ஆதித்யநாத். அப்படிப்பட்ட நிலையில் யோகி காலில் ரஜினிகாந்த் விழலாமா என்று பலரும் ஆச்சரியத்துடன் இதை விவாதித்து வருகின்றனர்.
பெரும்பாலானவர்களும் ரஜினிக்கென்று நாடு முழுவதும் ஒரு மரியாதை உள்ளது, அந்தஸ்து உள்ளது. தமிழ்நாட்டில் அவரை அவரது ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுள் போல பார்க்கிறார்கள். கட்சி சார்பற்று அனைத்து கட்சியினர் மத்தியிலும் ரஜினிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பெண்கள், குழந்தைகள் என ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் பிடித்த நடிகர் என்றால் அது ரஜினிதாந்த். அப்படிப்பட்டவர்கள் யோகி காலில் விழுந்ததைத் தவிர்த்திருக்கலாமே என்பது பலரின் கருத்தாக உள்ளது.
அதேசமயம், ரஜினிகாந்த் ஆதரவாளர்களோ அவரது செயலை நியாயப்படுத்தியுள்ளனர். ரஜினிகாந்த் எப்போதுமே பிறரை மதிப்பவர். அவர் வயது பார்த்து யாருக்கும் மரியாதை தருபவர் அல்ல. இதற்கு முன்பு கூட தன்னை விட வயதில் குறைந்தவரான விட்டல் மகராஜ் என்ற சாமியாரின் காலைத் தொட்டு வணங்கியுள்ளார் ரஜினிகாந்த். யோகி ஆதித்யநாத் முதல்வர் மட்டுமல்ல, கோரக்நாத் மடாதிபதியும் கூட . எனவே அந்த அடிப்படையில் துறவி ,மடாதிபதி என்ற அடிப்படையில்தான் ரஜினிகாந்த் காலில் விழுந்திருக்கிறார். இது விவாதிக்கக் கூடிய அளவுக்கு ஒரு விஷயமே கிடையாது என்பது அவர்களது கருத்தாகும்.
இதற்கிடையே, நேற்று யோகியுடன் இணைந்து ஜெயலிர் படம் பார்ப்பார் ரஜினி என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் யோகி நேற்று ஜெயிலர் படம் பார்க்கவும் வரவில்லை. துணை முதல்வருடன்தான் ரஜினி படத்தைப் பார்க்க நேரிட்டது. இதுவும் சலசலப்பாகியுள்ளது.
எது எப்படியோ ரஜினி எது செய்தாலும் அது விவாதமாகி விடுகிறது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}