ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்.. ஒய்பிளஸ் பாதுகாப்பு அளிப்பு

Oct 09, 2023,03:27 PM IST

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


பாலிவுட்  முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக் கான். பாலிவுட்டின் பாட்ஷா, கிங் கான், கிங் ஆஃப் ரொமான்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாகத் திரை துறையில் தோன்றியவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தவர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.




ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் வெற்றி  பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸ் நல்ல வசூலையும் அள்ளி குவித்துள்ளது. பாலிவுட் திரைப்படங்களில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு இப்படங்கள் வெற்றி பெற்றதால் உலகளவில் ஷாருக்கானின் மதிப்பும் அதிகரித்துள்ளது. நிலவில் இடம் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஷாருக்கானுக்கு தீவிர ரசிகர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


இந்த நிலையில், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்கள் ஆதிகளவில் வந்து கொண்டுள்ளன. இதுகுறித்து போலீஸிலும் ஷாருக் கான் புகார் கொடுத்துள்ளார். ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் அதிகரித்து இருப்பதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு  பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அவர் எங்கு சென்றாலும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்