எமெர்ஜென்சி எக்ஸிட் கதவு அருகே அமர்ந்துளேன்.. தயாநிதி மாறனின் ட்வீட் வைரல்!

Jan 21, 2023,04:08 PM IST
சென்னை: விமானத்தில் பயணிக்கும்போது உயர் அறிவு உடையவர்கள் எமெர்ஜென்சி எக்ஸிட் கதவை அவசியம் இன்றி திறக்கமாட்டார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.



கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் விமானத்தின் எமெர்ஜென்சி எக்ஸிட் கதவு திடீரென திறக்கப்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டு பின் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இந்த விவகாரம் உடனடியாக வெளியில் தெரியவில்லை.

ஆனால் விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்தது கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, அவருக்கு அருகில் இருந்தது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எனத் தெரிய வந்தது. இந்த விவகாரத்தை முதலில் வெளியில் கொண்டு வந்தவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதான்.

ஏற்கனவே ரஃபெல் வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலைக்கும், அமைச்சர்  செந்தில்பாலாஜிக்கும் பணிப்போர் நடந்து வந்த நிலையில் இந்த விவகாரத்தால் இருவருக்கும் இடையே மேலும் மோதல் வெடித்தது. இந்த நிலையில், அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவை கிண்டல் அடிக்கும் வகையில் தயாநிதி மாறன் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவில், இன்று கோவைக்கு இண்டிகோ விமானத்தில் எமெர்ஜென்சி எக்ஸிட் அருகில் உள்ள இருக்கை கிடைத்துள்ளது, ஆயினும் எமெர்ஜென்சி எக்ஸிட் கதவை திறக்கமாட்டேன். அப்படி திறந்தால் மன்னிப்பு கடிதம் எழுத நேரிடும். மேலும் எமெர்ஜென்சி எக்ஸிட் கதவை திறப்பதனால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும், உயரிய அறிவு உள்ளவர்கள் இதனை செய்யமாட்டார்கள். மேலும் பயணிகள் அனைவருக்கும் இரண்டு மணி நேரம் மிச்சமாகும் என பேசியுள்ளார். 

தற்போது தயாநிதி மாறனின் இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!

news

அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!

news

தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!

news

Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்

news

நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்