கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று, பசுமை பூங்கா மற்றும் திருக்குறள் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது திருவள்ளுவர் தமிழின் அடையாளம், அவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, 133 அடி திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வரும் ஜனவரி 1 ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்றும் இன்றும் என 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு வந்த முதல்வர் மு க ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையின் தோரண வாயிலில் பேரறிவு சிலை என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்து , வெள்ளி விழா நிகழ்ச்சியை தொடங்கினார். பின்னர் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில், ரூ.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, மற்றும் திமுக நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து இந்த கண்ணாடி பாலம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
அதன் பின்னர், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ள திருவள்ளுவர் மணல் சிற்பத்தை பார்வையிட்ட பிறகு, 11 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள லேசர் ஒளிகாட்சிகளை திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டின் இரண்டாவது நாளான இன்று பசுமை பூங்கா, மற்றும் திருக்குறள் கண்காட்சியை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு அமைய பெற்றுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் கன்னியாகுமரி கடற்கரை சாலையை திருவள்ளுவர் சாலை என பெயர் சூட்டினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், இது எனது வாழ்க்கையில் மிகவும் சிறந்த நாள். கலைஞரின் நீண்ட நாள் கனவுதான் திருவள்ளுவர் சிலை. அவர் செய்த சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். குறளோவியம் கண்டவர் கலைஞர், வள்ளுவர் கோட்டம் அமைத்தார். மயிலாப்பூரில் திருவள்ளுவர் நினைவிடம் அமைத்தார். பேருந்துகளில் குறளை இடம் பெறச் செய்தார். திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தார். இவையெல்லாம் கலைஞர் தமிழ்நாட்டுக்குத் தந்து சென்ற சொத்துக்கள்.
கலைஞர் வழியில் உழைப்பதே எனது கடமை. சில அதிமேதாவிகள் கேட்டார்கள், சிலை அமைத்ததற்கு எதற்கு விழா என்று. திருவள்ளுவர் தமிழின் அடையாளம், உலகின் அடையாளம், நமது மதம் குறல், நமது வழி குறள் நெறி என்றார் பெரியார். வகுப்பறையில் மட்டுமல்லாமல், இல்லங்களில் உள்ளங்களில் திருவள்ளுவர் வர வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா. எனவே நாம் திருவள்ளுவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம்
கன்னியாகுமரி பேரூராட்சி விரைவில் நகராட்சியாக மாற்றப்படும். அதேபோல திருவள்ளுவர் சிலைக்கு புதிதாக 3 படகுகள் வாங்கப்படும். அதில் ஒன்றுக்கு காமராஜர் பெயரும், இன்னொன்றுக்கு மார்ஷல் நேசமணி பெயரும், 3வது படகுக்கு ஜியூ போப் பெயரும் சூட்டப்படும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதையடுத்து தொடர்ந்து 4.9 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர். புதியதாக சுமார் ஒரு கோடியே 45 ஆயிரம் லட்சம் ரூபாயில் திருவள்ளுவர் நிலைய தோரண வாயிலுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இந்தத் தோரண வாயில் கன்னியாகுமரியின் சுற்றுலா மாளிகையின் அருகில் அமைக்கப்பட உள்ளது. மேலும் திருக்குறள் கண்காட்சியையும் திறந்து வைக்க இருக்கிறார் முதல்வர்.
இந்த விழாவின் நினைவாக தினம் ஒரு திருக்குறள் என்ற பெயரில் ஒரு திருக்குறள் மலரையும் வெளியிட்டார். விழாவை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக தூத்துக்குடி விமான நிலையம் செல்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சபரிமலையில் குவியும் காணிக்கை...41 நாளில் வருமானம் எவ்வளவு தெரியுமா?
நீங்க பத்தாம் வகுப்பு முடித்தவரா ? அப்போ ரயில்வேயில் சூப்பர் ஆப்பர் காத்திருக்கு..!
மக்களே உஷார்.. சீனாவில் பரவும் புதிய hmpv வைரஸ்.. உண்மை நிலை என்ன.. என்னெல்லாம் பாதிப்பு வரும்?
Pongal special.. தாம்பரம் - திருச்சி இடையே பொங்கல் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் புர்கா அணிய தடை.. புத்தாண்டிலிருந்து அமலுக்கு வந்த சட்டம்
வீட்ல யாருமே இல்லை.. எதுக்கு ரெய்டுன்னும் தெரியலை.. ED சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன்
டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. பனையூரில் ஆதரவாளர்களுடன்.. 3வது நாளாக தீவிர ஆலோசனை
12 வருட போராட்டத்திற்குப் பிறகு.. திரைக்கு வரும் மதகஜராஜா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
எருமை மாடா நீ... உதவியாளரிடம் சீறிய அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம்.. தஞ்சையில் சர்ச்சை
{{comments.comment}}