லக்னோ: இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அம்பயரின் தீர்ப்பால் அதிருப்தி அடைந்து "F..K" என்று கோபமாக கூறியது சர்ச்சையாகியுள்ளது. வார்னர் கூறியது குறித்து இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளா்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த ஆஸ்திரேலியா நேற்றுதான் தனது முதல் வெற்றியை சுவைத்தது. இலங்கைக்கு எதிராக லக்னோவில் நடந்த போட்டியில் ஆடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கின்போது தில்ஷன் மதுசங்கா பந்து வீச்சின்போது டேவிட் வார்னர் எல்பிடபிள்யூ முறையில்ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். எல்பிடபிள்யூ கொடுத்ததற்கு எதிராக ஆஸ்திரேலியா டிஆர்எஸ்ஸுக்குப் போனது. அதில் அவுட் என்பது உறுதியானதால் டேவிட் வார்னர் கடுப்பாகி பெவிலியன் நோக்கி திரும்பியபோது அம்பயரை நோக்கி "F..K" என்று கோபமாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கமென்டரி பாக்ஸில் இருந்த ஹர்பஜன் சிங், வார்னரின் செயலை உடனடியாக கண்டித்தார். அவர் கூறுகையில், வார்னர் பந்தை லேட்டாக அப்ரோச் செய்ததுதான் தவறு, அம்பயர் தவறு செய்யவில்லை. ஏன் வார்னர் கோபப்பட்டார் என்று தெரியவில்லை. இதில் கோபப்பட எந்தக் காரணமும் இல்லை என்றார் ஹர்பஜன் சிங்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}