Australia in Finals: நத்தை மாதிரி நகர்ந்து தவழ்ந்து உருண்டு.. பைனலுக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா!

Nov 16, 2023,10:10 PM IST

கொல்கத்தா:  213 ரன்கள் என்ற வெற்றி இலக்கை தட்டுத் தடுமாறி துரத்தி ஒரு வழியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது ஆஸ்திரேலியா. கடைசி ஓவர்களை டெஸ்ட் மேட்ச் போல மாற்றி விட்டது ஆஸ்திரேலியா.. ஒவ்வொரு ரன்னாக சேர்த்து சேர்த்து கரையேறி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.


ஆரம்பத்தில் சொதப்பினாலும் கூட பின்னர் தனது சுழற்பந்து வீச்சாளர்களால் ஆஸ்திரேலியாவை சற்று கட்டுப்படுத்தியது தென் ஆப்பிரிக்கா. இருப்பினும் கடுமையாக போராடி, தட்டுத் தடுமாறி வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது ஆஸ்திரேலியா.


தென் ஆப்பிரிக்கா இன்றைய பீல்டிங்கில் பெரும் சொதப்பலை செய்து விட்டது. பல கேட்ச்சுகளை ஈஸியாக நழுவ விட்டனர். ஆனால் சுழற்பந்து வீச்சு தென் ஆப்பிரிக்காவுக்கு புத்துயிர் கொடுத்தது. அதை வைத்து சில முக்கிய விக்கெட்களை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. ஆனால் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலியா, சமாளித்து ஆடி வெற்றியை சுவைத்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.




ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான டிரவிஸ் ஹெட்டும், டேவிட் வார்னரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். டிரவிஸ் அதிரடியாக ஆடி 62 ரன்களைக் குவிக்க, மறுபக்கம் டேவிட் வார்னர் வேகமாக செட் ஆகி வந்தார். ஆனால் 29 ரன்களில் அவரை மர்க்ரம் பெவிலியனுக்கு அனுப்பி விட்டார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சரிவு தொடங்கி விட்டது. பெரிய அளவிலான பார்ட்னர்ஷிப் வராமல் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர். இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித் கடுமையாக  போராடி 30 ரன்களைச் சேகரித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.


ஆஸ்திரேலியாவுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தவர் கிளன் மேக்ஸ்வெல்தான். அதிரடியாக ஆடி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எளிதாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தேவையில்லாத ஷாட் அடித்து ஆட்டமிழந்தார்.  இருப்பினும் ஜோஷ் இங்கிலீஷ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் கடுமையாக போராடி அணியை ஸ்திரப்படுத்தினர். ஜோஷ் இங்கிலீஷ் அவுட்டாகிச் சென்றபோது மீண்டும் நெருக்கடி வந்தது. ஆனால் கேப்டன் பாட் கம்மின்ஸும், ஸ்டார்க்கும் சேர்ந்து அணியை கரை சேர்த்து விட்டனர்.


முன்னதாக, ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான டிரவிஸ் ஹெட்டும், டேவிட் வார்னரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். டிரவிஸ் அதிரடியாக ஆடி 62 ரன்களைக் குவிக்க, மறுபக்கம் டேவிட் வார்னர் வேகமாக செட் ஆகி வந்தார். ஆனால் 29 ரன்களில் அவரை மர்க்ரம் பெவிலியனுக்கு அனுப்பி விட்டார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சரிவு தொடங்கி விட்டது. பெரிய அளவிலான பார்ட்னர்ஷிப் வராமல் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர்.


முன்னதாக, டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.  


ஆஸ்திரேலியா தனது பந்து வீச்சில் இன்று அனல் கக்கியது. அதிரடியான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்காவை முதல் பந்திலிருந்தே மிரட்டி ஒடுக்கியது ஆஸ்திரேலியா. தொடக்க ஆட்டக்காரர்களான குவின்டன் டி காக் 3 ரன்கள் எடுத்து அவுட்டாக, கேப்டன் பவுமா டக் அவுட் ஆகி பெருத்த ஏமாற்றத்தை அளித்தார்.


சொதப்பிய தென் ஆப்பிரிக்கா பேட்டிங்:




சரி அடுத்து வருபவர்களாவது பொறுப்போடு ஆடுவார்கள் என்று பார்த்தால் வருவதும் போவதுமாக இருந்தனர் தென் ஆப்பிரிக்க வீரர்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸி வான்டர் துஸ்ஸன் 31 பந்துகளைச் சாப்பிட்டு வெறும் 6 ரன்களை எடுத்து கேவலமாக ஆட்டமிழந்தார். ஒரு பவுண்டரி கூட அவர் அடிக்கவில்லை. மறுபக்கம் எய்டன் மர்க்ரம் 10 ரன்களில் மூட்டையைக் கட்டினார்.


ஹென்ரிச் கிளாசன் சற்று நிலைத்து ஆடி 47 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தின் ஸ்டார் என்றால் அது டேவிட் மில்லர்தான். தனது அனுபவத்தை களம் இறக்கிய அவர் கலக்கலாக ஆடி சதம் போட்டார். 116 பந்துகளைச் சந்தித்த அவர் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த யாருமே சோபிக்கவில்லை. இந்திய ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற கேசவ் மகராஜ் வெறும் 4 ரன்களில் சுருண்டு ஆட்டமிழந்தார்.


இறுதியில் 49.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் வரிசையை மிட்சல் ஸ்டார்க்கும், பாட் கம்மின்ஸும் முறித்துப் போட்டு விட்டனர். இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்த, ஜோஸ் ஹேசல்வுட், டிரவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்களைக் காலி செய்தனர். கிளன் மேக்ஸ்வெல் அட்டகாசமாக பவுலிங் செய்து 10 ஓவர்களில் வெறும் 35 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு மட்டுமல்லாமல் பீல்டிங்கும் இன்று சிறப்பாக இருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்