லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் மருமகளின் மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தியதால் அந்த மருமகள் ஆவேசமடைந்து, விவாகரத்து கேட்டு கோர்ட் வரை போய் விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படித்தான் சமீபத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது. ஹனிமூனுக்கு தென்னிந்தியாவுக்குக் கூட்டிக்கு கொண்டு போகச் சொன்னால் மாமியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கணவர் அயோத்திக்குக் கூட்டிப் போனதால் கடுப்பான மருமகள் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனார். இதுவும் வட இந்தியாவில்தான். இப்போது உ.பியில் ஒரு மாமியாருக்கு எதிராக அவரது மருமகள் ஆவேசமாகியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான திருமணங்கள் முறிவை நோக்கியே போய் கொண்டிருக்கின்றன. விட்டுக்கொடுக்கும் மனநிலை ஆண் மற்றும் பெண் இருவரிடமும் பெரும்பான்மையாக குறைந்து வருகிறது. முன்னாடி எல்லாம் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று கூறுவார்கள். இப்போதெல்லாம் திருமணங்கள் சின்ன சின்ன காரணங்களுக்காகக் கூட விவாகரத்து வரை போய் விடுகிறது.
பிடிச்சா வாழ்வோம்.. இல்லாட்டி "டைவோர்ஸ்" என்று சம்சாரம் அது மின்சாரம் மனோரமா மாதிரி கிளம்பி விடுகிறார்கள் கோர்ட்டுக்கு. முன்னர் எல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறி விட்டது. பெரியவர்களுக்கு குடும்பத்தில் மரியாதை குறைந்து விட்டது. அப்படியே கொடுத்தாலும் கடனுக்குத்தான் தருகிறார்கள். அவர்களை மதிப்பதே கிடையாது. அவர்கள் சொல்லுக்கும் மரியாதை இருந்தது. ஆனால் இப்பொழுதோ பெரியவர்களை வைத்து தான் குடும்ப சண்டைகளும், பிற பிரச்சினைகளும்தான் அதிகளவில் ஏற்படுகின்றன.
இப்படித்தான் உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது என்ன பிரச்சனை தெரியுமா? மாருமகளின் மேக்கப் கிட்டை எடுத்து மாமியார் பயன்படுது்தியுள்ளார். இது தான் பஞ்சாயத்தாகியுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த அந்தப் பெண்ணும், அவரது சகோதரியும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவரை திருமணம் செய்து ஒரே வீட்டில் வாக்கப்பட்டனர். திருமண வாழ்க்கை சந்தோசமாக தான் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மாமியார் மருமகளின் அனுமதி இன்றி அவரது மேக்கப் சாதனங்களை பயன்படுத்தியுள்ளார்.
இதற்கு மருமகள் மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த பிரச்சனை முற்றியது. நடந்த விஷயங்களை தன்னுடைய மகனிடம் மாமியார் தெரிவித்து இருக்கிறார். ஆத்திரம் அடைந்த கணவனும் மாமியாரும் மனைவியை அடித்து விரட்டியுள்ளனர். இது குறித்து சகோதரி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக சகோதரிகள் இருவரும் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், குடும்ப ஆலோசனை மையத்தில் மருமகள் மாமியாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
மருமகளோ, "எனக்கு இவிங்க சங்காத்தமே வேண்டாம்.. விவாகரத்து தான் வேண்டும்" என பிடிவாதமாக கூறி இருக்கிறார். மேலும், அடிக்கடி எங்கள் குடும்பத்திற்குள் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய கணவர் அவரது தாயாரின் பேச்சை கேட்டு என்னை துன்புறுத்துகிறார். எனக்கும் இவருடன் வாழ விருப்பமில்லை விவாகரத்து தரும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}