வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது

Sep 26, 2023,03:59 PM IST

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் வஹிதா ரஹ்மான். இவருக்கு வயது 85.  1955ம் ஆண்டு ரோஜூலு மராயி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.




அதன் பின்னர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில்  நடித்துள்ளார். தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபவும் 40 திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்தவர். கடைசியாக கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தில் கமலுக்குத் தாயாக நடித்திருந்தார். 


தேசிய திரைப்பட விருது, பிலிம்ஃபேர், பிலிம்ஃபேர் லைஃப் டைம் சாதனை விருது,  என்டிஆர் தேசிய விருது, பத்மஸ்ரீ  ஆகிய பல விருதுகளை பெற்றுள்ளார். தற்பொழுது , 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்