ஆழந்த காற்றழுத்தம்.. புயலாக மாறுவதில் தாமதம்.. 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்!

Nov 27, 2024,08:46 PM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது புயலாக அது மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 12 மணி நேரத்தில் புயலாக இது மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நான்கு மாவட்டங்களுக்கு நாளை விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அதை ஆரஞ்சு அலர்ட்டாக வானிலை மையம் மாற்றியுள்ளது. புயல் சின்னமானது மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் மிக மிக மெதுவாக தற்போது நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக வலுப்பெற்ற பிறகு 30ம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புயல் சின்னமானது சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.


முன்னதாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி  நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தமிழ்நாடு இலங்கை பகுதியை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற கூடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் எனவும் பெயர் சூட்டப்படவுள்ளது. 




இன்று காலை நிலவரப்படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் தற்போது நிலைமை மாற ஆரம்பித்துள்ளது. புயல் சின்னத்தின் வேகம் அடியோடு குறைந்ததற்கான காரணம் தெரியவில்லை. 


இன்று காலைதான் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும்  என  எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாறியுள்ளது. புயல் சின்னம் காரணமாக விழுப்புரம்,  கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்