Cyclone Fengal.. வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தம்.. ஃபெஞ்சல் புயலாக மாறியது.. நாளை கரையைக் கடக்கும்

Nov 29, 2024,05:17 PM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. நாளை இது மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெஞ்சல் எனவும் பெயரிடப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்திருந்ததால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. 




இதனால் மழை குறைந்து பலத்த காற்று வீசி வந்தது. மேலும், வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்து கரையைக் கடக்கும் என நேற்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் இன்றும் நாளையும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற இருப்பதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தற்போது இது புயலாக மாறியுள்ளது. ஃபெஞ்சல் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா வைத்த பெயர் இது.


இது தொடர்ந்து புயலாகவே வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில்  மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மதியம் கரையை கடக்க கூடும். புயல் கரையைக் கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீச கூடும். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நவம்பர் 23ம் தேதி இந்த புயல் சின்னமானது வங்கக் கடலில் உருவாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு புயலாக அவதாரம் எடுத்துள்ளது. வங்கக் கடலில் இந்த ஆண்டு உருவான 3வது புயலாகும் இது. அதேசமயம், வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் உருவான 2வது புயல் இது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்