சென்னை: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில், புயல் மழை காரணமாக 300 டன் பூக்கள் வீணாகி விட்டன. அவற்றை வியாபாரிகள் கீழே கொட்டினர். இதனால் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மிச்சாங் புயல் யாரையும் விட்டு வைக்க வில்லை. எல்லோருக்கும் ஓவ்வொரு விதத்தில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து விட்டு போயுள்ளது. அப்படி என்ன தான் புயலுக்கு சென்னை மக்கள் மீது கோபமோ தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் மழை என்னவோ 2 நாட்கள் தான். அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்றால் அது தோண்ட தோண்ட வந்து கொண்டே தான் உள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கும் ஒரு காட்டு காட்டி விட்டு போயுள்ளது மிச்சாங் புயல். சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் தான் என்றாலும், பாதிக்கப்பட்ட விதங்களும் அதிகம் எனலாம்.
புயல் கோயம்பேடு பூ மார்கெட்டையும் விட்டு வைக்க வில்லை. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூக்கள் வரும். ஆசியாவிலேயே மிகப்பெரிய பூ மார்கெட் என்றால் அது சென்னை கோயம்பேடு பூ மார்கெட் தான். பல மாட்டங்களில் இருந்து டன் கணக்கில் வரும் பூக்கள் அனைத்தும் ஒரே நாளில் விற்று தீர்ந்து விடும். அப்படிபட்ட பூ மார்க்கெட்டில் மிச்சாங் புயல் காரணமாக விற்பனையாகாமல், டன் கணக்கில் பூக்கள் அழுகிப் போய் விட்டன அதுவும் ஒரு டன், 2 டன் இல்லை கிட்டத்தட்ட 300 டன் பூக்கள் அழுகியுள்ளன.
பூக்களும் அழுகி பூ வியாபாரிகளையும் அழ வைத்து விட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட் முழுவதும் பூக்களின் அழுகல் வாடை தான் அதிகமாக உள்ளது. மிச்சாங் புயலினால் மலர் மனம் வீசும் கோயம்பேடு பூ மார்க்கெட் தற்பொழுது துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அழுகிய மலர்களை கொட்ட கூட இடம் இன்றி வியாபாரிகள் குவித்து வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்லும் இந்த மார்கெட்டிற்கு கடந்த ஒரு வாரகாலமாக யாரும் வராமல் பூக்கள் அனைத்து அழுகிய நிலையில் கீழே கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் மொத்த வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்
சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
{{comments.comment}}