Cyclone Fengal வருது.. இருந்தாலும் தயாரா இருங்க.. அப்டேட் பண்றோம்.. ஷாக் கொடுத்த சென்னை பள்ளி!

Nov 29, 2024,09:01 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் வட தமிழ்நாட்டை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில்,  நாளை பள்ளிக்கு வருவதற்குத் தயாராக இருக்குமாறு சென்னையைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்று தனது மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியிருப்பது அதிர வைத்துள்ளது.


வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல்  புயல் நாளை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதனால் நாளை சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவைக் கூட மூடச் சொல்லி விட்டார்கள்.


பீச் ரோட்டுக்கும் பூட்டு போட்டாச்சு. பூங்காக்களையும் மூட உத்தரவிடப்பட்டு விட்டது. இப்படி அரசு முதல் மக்கள் வரை எல்லோரும் ஒரு பக்கம் பாதுகாப்புக்கு உத்தரவாதங்களை ஏற்படுத்தி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சைதன்யா தனியார் பள்ளி ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளது.




தனது மாணவர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப்பில் அது அனுப்பியுள்ள செய்தியில், பெற்றோர்களே.. நாளை வானிலை சூழலுக்கேற்ப தகவல்கள் அப்டேட் செய்யப்படும். தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அதற்கேற்ப மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கல்விக்கும், ஏற்கனவே திட்டமிட்டவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்படும்.  அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் காலை 7 மணிக்கு முன்பே அப்டேட் செய்யப்படும். உங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்நோக்கியுள்ளோம் என்று அந்தப் பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நாளை அதி கன மழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகமும் விடுமுறை அறிவித்து விட்டது. யாரும் வெளியே வராதீங்க என்று அரசும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பள்ளி மட்டும் புயலைப் பற்றிக் கவலைப்படாமல் பள்ளிக் கூடத்திற்கு வருவதற்குத் தயாரா இருங்க, பரீட்சை முக்கியம் என்று கூறியிருப்பது வினோதமாக உள்ளது. இந்த அறிவிப்பால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத குழப்பமும் ஏற்பட்டுள்ளது.


புயலைப் பத்திப் பயப்படுவோமா.. இல்லை பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு ரெடி செய்வோமா என்று மன உளைச்சலும் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்

news

Cyclone Fengal to cross near Puducherry.. யாருக்கெல்லாம் நாளை ரெட் அலர்ட்?.. IMD Chennai Update

news

Cyclone Fengal வருது.. இருந்தாலும் தயாரா இருங்க.. அப்டேட் பண்றோம்.. ஷாக் கொடுத்த சென்னை பள்ளி!

news

கனமழை எதிரொலி.. அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள்!

news

ஃபெஞ்சல் புயல்.. 2024ம் ஆண்டில்.. வங்கக் கடலில் பிறந்த 3வது புயல்.. வட கிழக்கு பருவ காலத்தில் 2வது!

news

Cyclone Fengal.. வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தம்.. ஃபெஞ்சல் புயலாக மாறியது.. நாளை கரையைக் கடக்கும்

news

ஃபெஞ்சல் புயல்.. ரெட் அலர்ட் மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் தகவல்

news

Red alert: தமிழகத்தில் அதி கன மழை எச்சரிக்கை.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவிப்பு

news

சென்னையில்.. இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்