Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்

Nov 26, 2024,01:07 PM IST

சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட உள்ளது.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலக் காரணமாக சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. 




இந்த நிலையில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 590 கிலோமீட்டர் தொலைவில்  மையம் கொண்டுள்ளது. சென்னைக்குத் தெற்கு தென்கிழக்கு திசையில் 800 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கில் 710 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 


இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை நிலவரப்படி,மணிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. தற்போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக வலுப்பெற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை உருவாகும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. 


புயலாக மாறிய பின்னர் தொடர்ந்து இலங்கை கடற்கரையைத் தொட்டிபடி, வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு  கடற்கரை பகுதியை நோக்கி புயலானது நகரக்கூடும்.  தமிழ்நாட்டை நோக்கி புயல் நகரக் கூடும் என்பதால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழைக்கான வாய்ப்புள்ளது.


4 மாவட்டங்களில் மிக கன மழை


சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களிலும்  மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


புயல் உருவாகவுள்ளதால் மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாகப்பட்டனம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேசியப் பேரிடர் படையினர் அனுப்பப்படவுள்ளனர். மேலும் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் அங்கு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மழை மற்றும் புயல் மீட்பு ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!

news

அமைச்சர் கே. என். நேருவுக்கு உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் சிகிச்சை.. காய்ச்சல் என்று தகவல்

news

கல்யாண வீடியோக்களில் நெட்பிளிக்ஸ் ஆர்வம்.. நாக சைதன்யா கல்யாண வீடியோ உரிமை.. ரூ.50 கோடியாம்!

news

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்னையை வச்சு செய்த கன மழை.. விட்டு விட்டு பெய் ராசா.. தாங்காது!

news

Healthy Soups.. ஜிலுஜிலு மழைக்கேற்ற.. சூப்பரான கமகம வெஜிட்டபிள் சூப்.. செமையா இருக்கும்!

news

Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்

news

Gold rate .. தங்கம் விலை.. இன்றும் சூப்பராக குறைந்தது.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

அதே இடம்.. அதே புயல்.. OMG.. 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் Depression!

news

Natural medicine for Ulcer.. வயிற்று வலி, அசிடிட்டி தாங்க முடியலையா.. இயற்கையான மருந்து இருக்கே!

அதிகம் பார்க்கும் செய்திகள்