சென்னை: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே இன்று மாலையே கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால் நேற்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யத் தொடங்கியது. இதனையடுத்து தற்போது புயல் சின்னம் தமிழ்நாட்டை நோக்கி நெருங்கி வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது வரை கன மழை பெய்து வருகிறது.
சென்னை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. அப்பகுதிகளில் பலத்த மழையுடன் சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. கடந்த ஐந்து மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் நேற்று 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர தொடங்கியுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 140 km தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று பிற்பகல் புதுச்சேரி அருகே, மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்க கூடும். அப்போது கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரம் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் வேகமாக நகர தொடங்கியுள்ளதால் இன்று மாலையே கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் போது நள்ளிரவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது தேர்வு நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
{{comments.comment}}