சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் வடகடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடற்கரைப் பகுதிகளான மெரினா, அடையாறு, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
மாமல்லபுரம் - கல்பாக்கத்தில் கடல் கொந்தளிப்பு
மாமல்லபுரம் கடல் பகுதிகளில் நேற்றைவிட இன்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த கனமழை காரணமாக கல்பாக்கம் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இதனால் கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகர்புற பகுதிகளான பட்டினப்பாக்கம், அடையாறு, எம்ஆர்சி நகர், சாந்தோம், மயிலாப்பூர், திருவான்மியூர், மேற்கு மாம்பழம், தியாகராயர் நகர், கேகே நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, மந்தைவெளி, கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணாநகர், நந்தனம், சிந்தாதிரிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய நல்ல மழை பெய்து வருகிறது.
பாலத்தில் பார்க் ஆன கார்கள்
அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, கள்ளிக்குப்பம் அத்திப்பட்டு, அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சென்னையில் மிக்ஜாம் புயலால் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதத்தை சந்தித்தன. இதனை கருதிக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது ஃபெங்சல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் மழை வெள்ளத்தில் கார்களை அடித்துச் செல்லாமல் இருக்க வேளச்சேரி மேம்பாலத்தில் மக்கள் தங்களின் கார்களை பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். வேளச்சேரி மட்டுமல்லாமல் ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாலங்களின் மீது மக்கள் கார்களை பார்க் செய்து வருகின்றனர்.
சென்னை விமானங்கள்:
ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சென்னையிலிருந்து செல்லக்கூடிய விஜயவாடா, துபாய், திருச்சி, புவனேஸ்வர், மதுரை, கோவை, சிங்கப்பூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, அந்தமான், உள்ளிட்ட 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ஓடுபாதை தெளிவாக உள்ள பகுதிகளில் மட்டுமே விமானம் தரையிறக்க அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடிடுத்து பின்னர் தரையிறங்கி வருகின்றன. அதே சமயத்தில் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் ரயில்கள் என எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில்கள் இயக்கம்:
மெட்ரோ ரயில்களில் எலக்ட்ரிக் படிக்கட்டுகளில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய மெட்ரோ ரயில்கள் இன்று காலை 5 மணி முதல் 8:00 மணி வரை ஏழு நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதேபோல மாநகரப் போக்குரவத்துப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் அதிகம் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மட்டும் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் பலத்த மழை
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இன்று அதிக கன மழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஃபெங்கல் புயல் : சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
ஃபெங்கல் புயல் : சென்னையில் ஆவின் பால் தடையின்றி வழங்க ஏற்பாடு
ஃபெஞ்சல் புயல்: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் இன்று மாலையே கரையைக் கடக்கக் கூடும்.. இந்திய வானிலை மையம் தகவல்
புயல் மெதுவாக கரையைக் கடக்கும்.. சென்னையில் கன மழை நீடிக்கும்.. நள்ளிரவில் பலத்த மழை பெய்யும்!
Cyclone Fengla.. சென்னையில் கடல் சீற்றம்.. பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன.. சாலைகள் மிதக்கின்றன!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 30, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடாமல் வெளுக்கும் மழை
Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்
{{comments.comment}}