கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத பெரு மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, செல்லும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கனமழை வெளுத்து வாங்கியது இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. இந்த கனமழையுடன் சேர்ந்து பலத்த சூறாவளி காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த பெஞ்சல் புயல் கரையை கடந்து வலுவிழந்து தற்போது நிலப்பரப்பின் வழியாக கர்நாடகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அது நகர்ந்து கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி மழை:
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 14 மணி நேரமாக இடைவிடாத பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை தற்போதும் பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமழை கொட்டி தீர்த்துள்ளது. அங்குள்ள ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 சென்டிமீட்டர் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத இந்த பெரு மழையால் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீருடன் பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் அணையில் இருந்து 15,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆகிய இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் இந்த மழை வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மழை:
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 35 சென்டிமீட்டர் மழை வெளுத்து வாங்கியது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு பெய்த கனமழையால் பொன் அண்ணாமலை நகரில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.
பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பகுதிகளில் மோட்டார் பம்புகள் கொண்டு மழை நீர் அப்புறப் படுத்தப்பட்டாலும் மழை பெய்து வருவதால் தண்ணீர் தொடர்ந்து தேங்கி நிற்கிறது.
நீலகிரியிலும் மழை
அதேபோல் நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஊட்டி செல்லும் மலைகளில் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழை காரணமாக நீலகிரி உதகை கிருஷ்ணகிரி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இங்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டுக்கு வர வேண்டாம் என்று ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்.. திடீரென கைது செய்யப்பட்டது ஏன்?.. திடுக்கிடும் தகவல்கள்!
Pushpa 2.. விஜய் ஷாருக்கானை முந்திய அல்லு அர்ஜூன்.. ஆத்தாடி புஷ்பா 2 சம்பளம் இவ்வளவா??!
சம்பல் செல்ல முயற்சித்த ராகுல் காந்தி.. தடை போட்ட உ.பி. போலீஸ்.. டெல்லிக்கே திரும்பினார்!
புயல் பாதித்த மாவட்டங்களில்.. ஜனவரிக்குத் தள்ளிப் போகும் அரையாண்டு தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ்
வங்கி கணக்கிற்கு இனி 4 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் .. புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகிறார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்.. டிச. 5ல் பதவியேற்பு
Chennai Lakes: தொடர் மழையால் மேம்பட்ட சென்னை ஏரிகளின் நீர் இருப்பு.. சூப்பர் அப்டேட்!
அவசர சோறு ஆபத்து.. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!
Karthigai Maha Deepam 2024: கொடியேற்றத்துடன்.. திருவண்ணாமலையில் தொடங்கியது திருக்கார்த்திகை விழா!
{{comments.comment}}