சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால், ஊட்டி கொடைக்கானல் போன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை கடந்த 2 நாட்களாக குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ளது.இதற்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது தமிழ்நாட்டை நோக்கி 13 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாகவே மிதமான மழையுடன் தொடங்கி தற்போது பலத்த மழையாக பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் இன்று காலை முதல் மீண்டும் மழை மிரட்ட ஆரம்பித்துள்ளது. அங்குள்ள கடற்கரைகளில் கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசுகிறது. மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மிக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போதும் மழை பரவலாக பெய்ய தொடங்கியுள்ளது. இது தவிர திருச்சி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்தாலும் வானம் மோட்டத்துடன் காணப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை தொடர்வதால் வெயில் தலைகாட்டாமல் வானம் மேக மூட்டத்துடன் இதமான சில்லென்ற காற்று வீசுகிறது. வெயில் இல்லாமல் இதமான காற்றுடன் குளிரும் வாட்டி எடுக்கிறது. டிசம்பர், ஜனவரியில் நிலவும் குளிர் பனியை விட தற்போது மழையுடன் பெய்யும் இந்தப் பனி அதிக அளவில் குளிர்ச்சியை தருகிறது. ஊட்டி கொடைக்கானலே தோற்றுப் போய்விடும். அந்த அளவிற்கு தற்போது அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
பொதுவாக அந்த காலகட்டத்தில் மக்கள் மழையை தர்மம் என்றும், வெயிலை அதர்மம் என்றும் கூறுவது உண்டு. ஏனெனில் எவ்வளவு வெயில் அடித்தாலும் வெக்கையை பொறுத்துக் கொள்வோம். ஆனால் வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாக மழை பெய்தால் கூட நம்மால் தாங்க முடியாது. ஐயோ ஏன் தான் இந்த மழை பெய்ததோ என்று தெரியலையே, சகதியா இருக்கு. நசநசன்னு இருக்கு. வெளியே போக முடியல.துணி காய மாட்டேங்குது. அப்படின்னு புலம்பல் அதிகமாகி கொண்டே வரும். அந்த வகையில் தற்போது இரண்டு நாட்களாக பெய்து வரும் இந்த கனமழையால் சளி, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, என பல்வேறு உடல் உபாதைகளுடன் குளிரும் வாட்டி எடுக்கிறது.
இருந்தாலும் தானாக வந்த குளிரை விட்ருவோமா என்னா.. சுடச் சுட ஏதாவது செஞ்சு சாப்பிட்டும், டீ குடிச்சும் இந்த குளிரையும், கிளைமேட்டையும் மக்கள் விதம் விதமாக என்ஜாய் பண்ணுகிறார்கள்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cyclone Fengal.. நவம்பர் 30ம் தேதி பரங்கிப்பேட்டை- சென்னை இடையே கரையைக் கடக்கும்.. பிரதீப் ஜான்
Cyclne Fengal.. இன்று மாலை 5.30க்கு பெங்கல் புயல் உருவாகிறது.. தனியார் வானிலை ஆர்வலர் செல்வக்குமார்
Chennai climate.. வாடை வாட்டுது.. செம குளிரு.. ஜிலுஜிலு காத்து.. இது சென்னையா இல்லை ஊட்டியா??
48 வயதைத் தொட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. முதல்வர் கொடுத்த முத்தம்.. குவியும் வாழ்த்துகள்!
Gold Rate.. மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த தங்கம்: சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
Parliament: 2வது நாளாக இன்றும் அமளி துமளி முழக்கம்.. நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!
சென்னையில் வெறும் காற்றுதான் வீசுது.. மழை இல்லை.. பல மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று லீவு!
தமிழ்நாட்டை நோக்கி வேகமாக.. நகர்ந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
Tirupati temple.. திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.15,000 திருடியவர் கைது.. தலைக்கு தில்லுதான்!
{{comments.comment}}