கனமழை எதிரொலி.. அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள்!

Nov 29, 2024,06:07 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் மிக கன மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் 30ம் தேதி அரும்பாக்கம் மற்றும் செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை பார்க் செய்ய வேண்டாம் என்று மெட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயலானது நாளை பிற்பகல் வாக்கில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த மழையானது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மக்களும், அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். சென்னை மெட்ரோ நிறுவனமும் பயணிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.


இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இதற்கு முந்தைய அனுபவங்கள் கொடுத்துள்ள படிப்பினையின்படி, செயின்ட் தாமஸ் மெளன்ட் மெட்ரோ மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ  ரயில் நிலையங்களின் பார்க்கிங்கில், 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள். வானிலை நிலவரத்திற்கு ஏற்ப இந்த தேதியில் மாற்றங்கள் இருக்கும். அவை பின்னர் அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் என்பதால் இங்கு வாகனங்களைப் பார்க் செய்வதைத் தவிர்க்குமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்

news

Cyclone Fengal to cross near Puducherry.. யாருக்கெல்லாம் நாளை ரெட் அலர்ட்?.. IMD Chennai Update

news

Cyclone Fengal வருது.. இருந்தாலும் தயாரா இருங்க.. அப்டேட் பண்றோம்.. ஷாக் கொடுத்த சென்னை பள்ளி!

news

கனமழை எதிரொலி.. அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள்!

news

ஃபெஞ்சல் புயல்.. 2024ம் ஆண்டில்.. வங்கக் கடலில் பிறந்த 3வது புயல்.. வட கிழக்கு பருவ காலத்தில் 2வது!

news

Cyclone Fengal.. வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தம்.. ஃபெஞ்சல் புயலாக மாறியது.. நாளை கரையைக் கடக்கும்

news

ஃபெஞ்சல் புயல்.. ரெட் அலர்ட் மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் தகவல்

news

Red alert: தமிழகத்தில் அதி கன மழை எச்சரிக்கை.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவிப்பு

news

சென்னையில்.. இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்