புயல் மெதுவாக கரையைக் கடக்கும்.. சென்னையில் கன மழை நீடிக்கும்.. நள்ளிரவில் பலத்த மழை பெய்யும்!

Nov 30, 2024,10:50 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயலானது மெதுவாக கரையைக் கடக்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக நேரம் பலத்த மழை பெய்யும். புயல் இரவில் கரையைக் கடக்க ஆரம்பிக்கும். நள்ளிரவில் மிக பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிரதீப் ஜான் கொடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மீது தற்போது அடர்த்தியான மேகக் கூட்டம் பரவியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். புயல் மெதுவாக நகருகிறது என்பதால் இந்த நான்கு மாவட்டங்களிலும் அடர்த்தியான மழை, நீண்ட நேரம் பெய்யும் வாய்ப்புள்ளது.


இரவிலிருந்து காலை எட்டரை மணி வரையிலான காலத்தில் 60 முதல் 120 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துல்ளது. அடுத்த 12 முதல் 18 மணி நேரம் முக்கியமானது.




சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் முதல் மகாபலிபுரம் இடையிலான பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் புயல் கரையைக் கடக்கும். எப்போது அது கரையைக் கடக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். அனேகமாக இரவில் கரையைக் கடக்க ஆரம்பித்து நள்ளிரவில் அதாவது டிசம்பர் 1ம் தேதி அதிகாலையில்  புயல் கரையைக் கடந்து முடியும். புயல் கரையைக் கடந்து முடியும் வரை கன மழை நீடிக்கும். புயல் மெதுவாக கடந்தால் மழையும் நீடிக்கும்.


இன்று மாலை அல்லது இரவிலிருந்து காற்று வேகம் பிடிக்கும் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் அளவுக்கு காற்று இருக்கும்.  இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் அடுத்த 12 முதல் 18 மணி நேரம் வரை கன மழை இருக்கப் போகிறது. அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஃபெங்கல் புயல் : சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

news

ஃபெங்கல் புயல் : சென்னையில் ஆவின் பால் தடையின்றி வழங்க ஏற்பாடு

news

ஃபெஞ்சல் புயல்: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

news

ஃபெஞ்சல் புயல் இன்று மாலையே கரையைக் கடக்கக் கூடும்.. இந்திய வானிலை மையம் தகவல்

news

புயல் மெதுவாக கரையைக் கடக்கும்.. சென்னையில் கன மழை நீடிக்கும்.. நள்ளிரவில் பலத்த மழை பெய்யும்!

news

Cyclone Fengla.. சென்னையில் கடல் சீற்றம்.. பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன.. சாலைகள் மிதக்கின்றன!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 30, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடாமல் வெளுக்கும் மழை

news

Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்