ஃபெஞ்சல் புயல்: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

Nov 30, 2024,11:36 AM IST

சென்னை:  ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மழை தொடர்பான  புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


நேற்று தொடங்கிய  ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




ஃபெஞ்சல் புயலினால், இன்று சென்ன, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புள், கள்ளக்குறிச்சி, கடலூர்  மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்ததுடன் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,

வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது,


ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,  புயல் மற்றும் அதிக கனமழை எச்சரிக்கை தொடர்ந்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக இந்திய கடற்படை மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மழை தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்.


சென்னை மழை தொடர்பான புகார்களுக்கு


1070 - மாநில உதவி எண் 

1077 - மாவட்ட உதவி எண் 

94458 69848 - வாட்ஸ் அப் செங்கல்பட்டு


செங்கல்பட்டு


1077 - மாவட்ட உதவி எண்

044-27427412, 044-27427414 - தொலைபேசி எண்கள்

9444272345 - வாட்ஸ் அப் எண்


கடலூர் 


1077 - மாவட்ட உதவி எண்

04142 220700 - தொலைபேசி எண்

94899 30520 - வாட்ஸ்ஆப் எண்


என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்