சுழற்றியடிக்கும் டானா புயல் எதிரொலி.. கொல்கத்தா, புவனேஸ்வருக்கு ரயில்கள், விமானங்கள் ரத்து

Oct 24, 2024,12:09 PM IST

பூரி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் காரணமாக இன்றும் நாளையும் கொல்கத்தாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் தற்போது வடமிருக்கு திசையில் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது நாளை ஒடிசாவின் பூரி கடற்கரை மற்றும் மேற்கு வங்கம் சாகர் தீவுப் பகுதிக்கும் இடையே அது தீவிரப் புயலாகவே கரையை கடக்க உள்ளது.அப்போது   சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 




இதனால்  ஒடிசாவில் உள்ள பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ், ஜகத்சிங்பூர்  புரி ஆகிய இடங்களிலும், மற்றும் மேற்குவங்க பகுதிகளில் புர்பா மெதினிபூர், ஜார்கிரம், கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, பஸ்சிம், தெற்கு 24 பர்கனாஸ் ஆகிய இடங்களிலும் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்க பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில அரசுகள்.


அதன்படி, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள சுமார் 20 லட்சம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரிசாவில் 20 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மேற்கு வங்கத்தில் 13 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் என மொத்தம் 33 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால் கொல்கத்தாவில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டிலிருந்து 7 ரயில்கள் ரத்து


டானா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு செல்லும் 21 ரயில்களும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரயில்கள் என 28 ரயில்கள் உட்பட, மொத்தம் 300  ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதற்கிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்