வங்கக்கடலில் உருவானது.. டாணா புயல்.. நாளை அதி தீவிர புயலாக மாறும்..!

Oct 23, 2024,10:43 AM IST

சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவானது ‌. இந்தப் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ‌ குறிப்பாக நேற்று கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஆம்பூர், உள்ளிட்ட பல இடங்களில் நள்ளிரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் சூழ்ந்தது. தற்போது தீபாவளி பண்டிகை என்பதாலும், தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்ததாலும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்து சென்றதால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.





இந்த நிலையில் மத்திய வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டு வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த வெளியிட்டுள்ளது. அதன்படி,

 

மத்திய கிழக்கு  வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று 

 புயலாக உருவானது. இந்த புயல் இருக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டாணா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த புயல் தற்போது ஏழு கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது. இதை தொடர்ந்து நாளை காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிதீவிர புயலாக மாறுகிறது. பின்னர் நாளை மறுநாள் அதாவது 25ஆம் தேதி தீவிர புயலாகவே ஒடிசா பூரி கடற்கரை மற்றும் சாகர் தீவு இடையே டானா புயல் கரையை கடக்க உள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 120 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீச கூடும். இந்த டானா புயல் காரணமாக அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதி ஒடிசா மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.  இது நடபாண்டின் மூன்றாவது புயலாகவும், வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயலாகவும் உருவாகியுள்ளது இந்த டானா புயல்.


இந்த டானா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் 28 ரயில்கள் ரத்து: 


டானா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து ஒடிசா கடற்கரை மற்றும் மேற்கு வங்கம் பகுதிக்கு செல்லும் ரயில்களும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ரயில்கள் என மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூர் யஷ்வந்த்பூரில் இருந்து நாளை காலை ஹவுரா செல்லக்கூடிய விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாளை காலை நெல்லையிலிருந்து புறப்பட்டு புரூன்யா செல்லக்கூடிய ரயிலும்,நாளை மறுநாள் மதியம் ஒரு மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு ஷாலிமர் செல்லக்கூடிய விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை நண்பகல் புறப்பட்டு  சந்திரகாச்சி செல்லும் ரயிலும்,  கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டிற்கு வரும் ரயில்கள் ரத்து: 


கான்பூரில் இருந்து விழுப்புரத்திற்கு நாளை மறுநாள் வரும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலிமர் டூ சென்னை  சென்ட்ரலுக்கு வரும் கோரமெண்டல் எக்ஸ்பிரஸ், நாளை மறுநாள் சென்னையில் இருந்து சந்திரகாச்சி செல்லும் ரயில் உட்பட ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை கோயம்பேடு சந்தையில் எந்த காய் என்ன விலை?... இதோ முழு விபரம்...!

news

தீபாவளி சிறப்பு ரயில்கள்.. சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. அடுத்து பஸ்ஸைப் பிடிக்க வேண்டியதுதான்!

news

தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கம் விலை.. கடைப் பக்கம் போகவே பயமா இருக்கேப்பா!

news

ஆயிரத்து 500 ரூபாய் மிச்சம் (சிறுகதை)

news

வங்கக்கடலில் உருவானது.. டாணா புயல்.. நாளை அதி தீவிர புயலாக மாறும்..!

news

மேலடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில்.. இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

news

அக்டோபர் 23 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

கும்ப ராசிக்காரர்களே... சுகங்கள் தேடி வரும் காலம்.. சிம்ம ராசிக்காரர்களே.. ஜாக்கிரதை!

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்